அம்மன் : மாரியம்மன்
பிறபெயர் : முத்துமாரி
பெருமை : சுயம்பு
சிறப்பு : ஸ்ரீசக்கரம்
அம்பிகை : துர்க்கை
தலமரம் : வேம்புமரம்
தீர்த்தம் : வெல்லகுளம்
ஊர் : புன்னைநல்லூர்
பழையபெயர் : புன்னைவனம்
மாவட்டம் : தஞ்சாவூர்
பிரார்த்தனை
*அம்மை நோய் கண்டவர்கள் இத்தலத்துக்கு பெருமளவில் பிரார்த்தனை செய்து குணமடையப் பெறுவது இத்தலத்தின் மிகப் புகழ் பெற்ற பிரார்த்தனை ஆகும்.இத்தலத்தில் தங்கி வழிப்பட்ட சில தினங்களில் அம்மை இறங்கி குணமாகி விடுகிறது.
*தவிர தோல் வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் , கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் , வயிற்று வலியால் பாதிக்கப்பட்டவர்கள், உடம்பில் சொறி, சிரங்கு உள்ளவர்கள்,உடம்பில் கட்டிகள் ஏற்பட்டு தொல்லை உள்ளவர்கள் , உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவரால் கூட கைவிடப்பட்டவர்கள் இத்தலத்தில் பிரார்த்தனை செய்து குணமடைகிறார்கள்.
*மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, பணியிடம் மாற்றம் ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் அம்மன் பக்தர்களது வேண்டுதல்களையும் நிறைவேற்றி கொடுக்கிறார்
நேர்த்தி கடன்
*அம்மை நோய் கண்டவர்கள் அம்மை இறங்கியவுடன் அம்மனுக்கு மாவிளக்கு போடுகிறார்கள்.குறிப்பாக கண் நோயால் பாதிக்கப்பட்டு குணமானவர்கள் கண்ணில் மாவிளக்கு போடுகின்றனர்.வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டு குணமானவர்கள் வயிற்றில் மாவிளக்கு போடுகின்றனர்..உடம்பில் கட்டிகள் இருந்து குணமானவர்கள் வெல்லக்குளத்தில் வெல்லம் வாங்கிப் போடுகிறார்கள்.சொரி சிரங்கு இருந்தவர்கள் உப்பு வாங்கிப் போடுகின்றனர்.
*ஆடு, மாடு , கோழி காணிக்கை தருகின்றனர்.கணவருக்காக நேர்ந்து கொண்ட பெண்கள் திருமாங்கல்யம் சாத்துதலை நேர்த்திகடனாக செய்கின்றனர்.
*முடிக்காணிக்கை,பால்குடம் எடுத்தல், பால்காவடி,அக்னி சட்டி எடுத்தல் போன்றவையும் இத்தலத்து முக்கிய நேர்த்திகடன்கள் ஆகும்
*தவிர திருமணம் வேண்டுவோர் அம்மனுக்கு நிலைமாலை சாத்துகிறார்கள்
*கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகிவற்றை செய்யலாம்.தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம்.வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.
கோயிலின் சிறப்பம்சம்
*சுயம்பு அம்மன் :
மூலஸ்தான மாரியம்மன் புற்று மண்ணால் உருவானது என்பது ஒரு தனிச் சிறப்பாகும். மூலவர் அம்மன் புற்று மண்ணால் ஆனதால் மூலஸ்தான அம்பாளுக்கு அபிசேகங்கள் செய்யப்படுவதில்லை. தைலக் காப்பு சாற்றப்படுகிறது. விஷ்ணு துர்க்கைக்கும் அம்பாள் உற்சவ மூர்த்திக்கும் நித்தியபடி அபிசேகம் நடைபெறுகிறது. அம்பாளுக்கு 5 வருடத்திற்கு ஒரு முறை ஒரு மண்டலம் தைல காப்பு அபிசேகம் நடைபெறும். அவ்வமயம் ஒரு மண்டலம் அம்பாளை ஒரு வெண் திரையில் வரைந்து ஆவாகனம் செய்து, அதற்குதான் அர்ச்சனை ஆராதனைகள் நடைபெறும்.அப்போது மூலஸ்தான அம்பாளுக்கு 48 நாட்களிலும் தினமும் இரு வேளை சாம்பிராணி தைலம், புணுகு, அரகஜா, ஜவ்வாது ஆகியவற்றால் அபிசேகம் நடைபெறும்.தைலாபிசேக நேரத்தில் அம்பாளின் தைலகாப்பின்போது உக்ரம் அதிகமாகும்.அதை தவிர்க்க அம்பாளுக்கு தயிர் பள்ளயம், இளநீர் வைத்து நைவேத்தியம் நடைபெறும்.
*உள்தொட்டி நிரப்புதல் :
அம்மன் சந்நிதிக்கு அருகில் உள்ள தொட்டி உள்தொட்டி என்றும், பிரகாரத்தை சுற்றி உள்ள தொட்டி வெளித்தொட்டி என்றும் அழைக்கப்படுகிறது.அம்மை நோய்கண்டவர்கள் இந்த இரண்டு தொட்டிகளிலும் குடம் குடமாக தண்ணீர் ஊற்றுகின்றனர்.இவ்வாறு செய்வதால் அம்பாளின் உஷ்ணம் தணிக்கப்படுகிறது.ஒவ்வொரு வருடமும் கோடைநாட்களில் அம்பாளுக்கு முகத்திலும், சிரசிலும் முத்து முத்தாக வியர்வை வியர்த்து தானாக மாறிவிடும் பழக்கம் தற்போதுவரை உள்ளது.இதன் காரணமாகவே அன்னையை முத்து மாரி என்று அழைக்கின்றார்கள். குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு வைசூரி வார்க்கும் சமயத்தில் அம்மனுக்கு பிரார்த்தனை செய்து உள்தொட்டி, வெளித்தொட்டிகளில் நீர் நிரப்பினால் விரைவில் எவ்வித சிரமமும் இன்றி குணமடைந்து வருவது இன்றுவரை கண்கூடாக உள்ளது
தல பெருமைகள் :
*சுயம்பு வடிவாய் புற்று மண்ணால் ஆன அம்மன்
*சுமார் 6 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக காட்சி தருகிறாள் அம்மன்.
*அம்மனுக்கு தைல அபிசேகம் மட்டுமே.அபிசேகங்கள் கிடையாது.
*உள்தொட்டி நிரப்புதல் என்பது இங்கு சிறப்பு வாய்ந்த பிரார்த்தனை ஆகும்.
*அம்மை நோய் 2 அல்லது 3 தினங்களிலேயே இத்தலத்தில் வழிபடுவோர்க்கு குணமாகிவிடுகிறது.
*பசுமையான வயல்களுக்கு மத்தியில் புன்னைநல்லூர் கோயில் அமைந்துள்ளது.
*கண்ணைக் கவரும் மராத்திய மன்னர்களது நிறைந்த வெளிமண்டபம் கோயிலுக்குள் நுழைந்தவுடன் காணப்படுகிறது.
*இங்கு உட்பிரகாரத்தில் எழுந்தருளியிருக்கும் பாடகச்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள் பைரவ உபாசகராக இருந்து குறைவிலா அன்னதானம் செய்ததுடன் தனது சித்தியினால் அனைவருக்கும் திருநீறு அளித்து வந்து தீராத நோயெல்லாம் தீர்த்து வைத்திருக்கிறார்.
*ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திர சுவாமிகளால் மாரியம்மன் யந்திர பிரஷ்டை செய்யப்பட்டதாகும்.
*ஆகம விதிப்படி தினசரி நான்கு கால பூஜை நடைபெறும் கோயில் இது.
*இத்திருக்கோயில் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த 88 திருக்கோயில்களில் ஒன்றாகும்.
*புகழ் பெற்ற பிரார்த்தனை தலமான இக்கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் பெரும் எண்ணிக்கையில் பக்தர்கள் கூட்டம் குவிவது வழக்கம்.
தல வரலாறு :
கீர்த்தி சோழன் என்னும் அரசர் இவ்வம்பிகையின் அருளால் ஒரு ஆண்மகனைப் பெற்று அதற்கு தேவசோழன் என்னும் பெயரைச் சூட்டி அவன் பல ஆண்டுகள் சோழ சாம்ராஜ்யத்தை ஆண்டு வந்தான். தஞ்சையை ஆண்ட வெங்கோஜி மகாராஜா 1680 ல் திருத்தல யாத்திரை செய்யுங்கால் கண்ணபுரம் என்னும் சமயபுரத்தில் தங்கி வழிபாடு செய்தார். அன்றிரவு அம்பிகை அரசனின் கனவில் தோன்றி, தஞ்சைக்கு கிழக்கே 7 கி.மீ. தூரத்தில் உள்ள புன்னைக் காட்டில் புற்று உருவாய் உள்ள தன்னை வந்து சேவிக்கும்படி கூறவே, அவ்வரசன் தலைநகராகிய தஞ்சைக்கு வந்து புன்னைக் காட்டிற்கு வழியமைத்து, அம்பிகை இருப்பிடத்தைக் கண்டு சிறிய கூரையமைத்து, புன்னைநல்லூர் என்று பெயரிட்டு அக்கிரமத்தையும் ஆலயத்திற்கு வழங்கினார்.1728 1735 ல் தஞ்சையை ஆண்ட துளஜா ராஜாவின் புதல்வி வைசூரியால் கண் பாதிக்கப்பட்டு இந்த அம்பிகையை வழிபட்டு குணமானாள். அம்பிகையின் அருளை எண்ணி அவ்வரசன் அம்பிகைக்கு சிறிய கோயிலாக கட்டினார்.காலப்போக்கில் இது இவ்வளவு கோயிலாக மாறியது என்று வரலாறு கூறுகிறது.
முக்கிய திருவிழாக்கள்
*ஆடி மாதம் முத்துப்பல்லக்கு
*ஆவணி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெறும்.
*புரட்டாசி மாதம் தெப்ப உற்சவம் மற்றும் நவராத்திரி திருவிழா
*தவிர ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் இத்திருக்கோயிலுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் பல ஊர்களிலிருந்தும் வந்து அம்பாளை தரிசித்து பேரானந்தம் அடைவர்.
*வருடத்தின் சிறப்பு நாட்களான விநாயகர் சதுர்த்தி,தீபாவளி பொங்கல்,தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.
பொது தகவல்கள்
*முக்கிய ஊர்களிலிருந்து தூரம் :
தஞ்சை நகரிலிருந்து கிழக்கே 7 கி.மீ.
*தங்கும் வசதி : குடும்பத்தோடு வருபவர்கள் தஞ்சை நகரில் தங்கி கோயிலுக்கு வந்து தரிசனம் செய்யலாம்.தஞ்சை நகரில் நிறைய தனியார் லாட்ஜ்கள் உள்ளன.
கட்டணம் ரூ.150 முதல் ரூ.600 வரை.
*போக்குவரத்து வசதி :
*தஞ்சை நகரிலிருந்து கிழக்கே 7 கி.மீ. தொலைவில் புன்னை நல்லூர் கோயில் இருக்கிறது.தஞ்சையிலிருந்து அடிக்கடி பேருந்துப் போக்குவரத்து வசதி உள்ளதால் கோயிலுக்கு சென்றடைவது எளிது.
*அருகிலுள்ள ரயில் நிலையம் தஞ்சை
*அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி.
திங்கள், ஜூலை 3
வெள்ளி, ஜூன் 23
அருள்மிகு ரேணுகாம்பாள் அம்மன் திருக்கோயில் , படவேடு
அம்மன் : ரேணுகாம்பாள்
பெருமை : சுயம்பு
சிறப்பு : சக்தி பீடம்
அம்பாள்சிரசு : தனியாக
விசேசம் : விபூதி
தலமரம் : மாமரம்
தீர்த்தம் : கமண்டலநதி
ஊர் : படவேடு
புராணபெயர் : படைவீடு
மாவட்டம் : திருவண்ணாமலை
பிரார்த்தனை
* அம்மை கண்டவர்கள் இத்தலத்தில் வந்து வேண்டிக் கொள்கின்றனர்.
*விரதமிருந்து இத்தலத்துக்கு வந்து தங்கி அம்மனுக்கு சேவை செய்து வந்து அதிக பட்சம் 3 அல்லது 5 நாட்களுக்குள் அம்மை இறங்கி விடுகிறது.
*தலத்தில் தரும் தீர்த்தத்தை உடல் மேல் தெளித்துக் கொள்கின்றனர். வேப்பிலை தண்ணீரை தீர்த்தமாக வாங்கிக் குடித்துவிட்டு அம்மனை வணங்கிச் செல்கிறார்கள்.
*மேலும் திருமண வரம் குழந்தை வரம் வேண்டியும் பக்தர்கள் இத்தலத்தில் வேண்டிக் கொள்கின்றனர்.எந்த வகை நோயானாலும் இங்கு வந்து வழிபட்டால் அம்மனின் அருளால் உடனே குணமடைவதாக இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் பரவசத்துடன் கூறுகின்றனர்.
*குறிப்பாக கண் நோய், கண்பார்வை இல்லாதவர்கள் இங்கு வந்து அம்மனை வழிபடுகின்றனர்.
நேர்த்தி கடன்
*பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேறியவுடன் நேர்த்திகடன்களாகஎடைக்கு எடை நாணயம் செலுத்துகிறார்கள்(துலாபாரம்) , நெய்தீபம் ஏற்றுகின்றனர்.
*சிலை கண்ணடக்கம், உருவ வகையறா,மற்றும் புடவை ஆகியவற்றையும் செலுத்துகிறார்கள்.
*வேப்பிலையை மட்டும் உடையாக உடுத்திக் கொண்டு கோயிலை வலம் வருதல்,அங்கபிரதட்சணம் செய்தல், மொட்டை அடித்தல், காதுகுத்தல், தொட்டில் கட்டுதல், ஆடு மாடு கோழி காணிக்கை செலுத்தல் ஆகியவை இத்தலத்தில் பக்தர்கள் செலுத்தும் முக்கியமான நேர்த்திகடன்களாகும்.
*முகத்தில் உள்ள மருக்கள், பருக்கள் ஆகியன நீங்குவதற்காக வெல்லம் மிளகு ஆகியவற்றை செலுத்துகிறார்கள்.
*குழந்தை வரம் வேண்டுவோர் பரசுராமருக்கு தொட்டில் கட்டுகின்றனர்.
*கோடிதீபம் ஏற்றுதல் இத்தலத்தில் மிகவும் சிறப்புடையதாக கருதப்படுகிறது.
மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் நேர்த்திகடன்களாக பிரசாதம் செய்து பக்தர்களுக்கு தருகிறார்கள். தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்கிறார்கள்.
கோயிலின் சிறப்பம்சம்
*வெட்டியெடுத்து தரப்படும் திருநீறு
பொதுவாக அம்மன் தலங்களில் குங்குமம் தான் பிரசாதமாக தரப்படும். ஆனால் இங்கு மட்டும் வித்தியாசமாக திருநீறு தரப்படுகிறது.இத்தலத்தில் தரப்படும் திருநீறு விசேசமானது. தானாக தோன்றியாதாகும்.பூமியில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டதாகும்.இந்த திருநீறு இத்தலத்திலிருந்து சற்று தொலைவில் உள்ள ஜமதக்கனி முனிவர் (அதாவத ரேணுகாதேவியின் கணவர்)வாழ்ந்ததாக கருதப்படும் ஆசிரமத்தில் அவர் யாகம் செய்த இடத்திலிருந்து வெட்டி எடுக்கப்படுகிறது.வருடாவருடம் ஆனித்திருமஞ்சனம் அன்று அந்த இடத்தில் பூமியில் பூத்திருக்கும் திருநீறை வெட்டி எடுத்து வந்து பக்தர்களுக்கு தரப்படுகிறது. பிணி, வயிற்றுவலி ஆகியவை குணமடையவும் குழந்தைவரம் கிடைக்கவும் இந்த திருநீறை தண்ணீரில் கலந்து பக்தர்கள் அருந்துகிறார்கள்.இவ்வாறு அருந்திய சிலதினங்களில் தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
*கருவறைச் சிறப்பு :
இத்திருக்கோயிலின் கருவறையில் வேறெங்குமில்லாத வகையில் சிறப்பு அம்சமாக அன்னை ரேணுகாதேவி (சிரசு மட்டும்) சுயம்பு உருவமாகவும், பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய மும்மூர்த்திகள் அரூபங்களுடன் எழுந்தருளியுள்ளார்கள்.மேலும் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த பாணலிங்கமும், சிலா சிரசும், சுதையிலான அம்மன் முழு திருவுருவமும் கருவறையில் அமையப் பெற்றுள்ளது.மும்மூர்த்திகளுடன் எழுந்தருளியுள்ள அன்னை ரேணுகாதேவியை வழிபட மும்மூர்த்திகளையும் வழிபட்ட பலன் உண்டு.பரசுராமரின் சிலையும் கருவறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தல பெருமைகள் :
*அம்மன் இங்கு சுயம்புவாய் எழுந்தருளியிருப்பது முக்கிய சிறப்பம்சம்.அதோடு பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய மும்மூர்த்திகளையும் உடன் கொண்டு பேருருக் கொண்டு உலகில் சக்தியே எல்லாமென எடுத்துக்காட்டி அருள்புரிந்து வருகிறாள்.
*ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பாணலிங்கமும் ஜனாகர்ஷண சக்கரமும் அமைந்துள்ளது சிறப்பாகும்.
*ஞானியர் பலர் தவமிருந்து சித்திகள் பல பெற்றதும் இத்திருத்தலத்தில்தான்.
*தொண்டை மண்டலத்து சக்தி தலங்களில் இத்தலம் முக்கியமான ஒன்றாகும்.
*சக்தி பீடங்களில் இத்தலம் மிகவும் முக்கியமானது.
*ஜமதக்கனி முனிவருக்கும் ரேணுகாம்பாளுக்கும் பிறந்த பரசுராமர் அவதரித்த தலம் இது.
*இது பரசுராமர் பிறந்த ஷேத்திரம் என்பதால் பரசுராம ஷேத்திரம் என்று இத்தலத்துக்கு பெயர்.
*மூலஸ்தானத்தில் பரசுராமரின் தனியாக சிலை உள்ளது குறிப்பிடத்தக்கது.
*இக்கோயில் அம்மன் கோயில் என்றாலும் சுற்றுச் சுவர்களில் சிங்க வாகனம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.அதற்கு பதில் இங்கு பசுவே உள்ளது.
*பொதுவாக அம்மன் சந்நிதிகளில் பலிபீடம் முன்பு யாழி அல்லது சிங்கம் இருக்கும். ஆனால் இங்கு மட்டும் எருது உள்ளது.
*கணபதி முனிவர் இங்கு யாகம் செய்துள்ளார்.அவர்தான் அம்பாளின் சிறப்பை வெளிக்கொணர்ந்தவர்.
*மற்ற அம்மன் சந்நிதிகளில் குங்குமம்தான் பிரசாதமாக தரப்படும். ஆனால் இங்கு குங்குமம் தரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்க அம்சம்.
*அழகிய சிற்பங்கள் உள்ள அற்புதமான கோயில் இது.
தல வரலாறு :
ரேணுகாதேவி இரைவத மகாராஜனின் மகளாக பிறந்து ஜமதக்கினி முனிவரை மணம் முடித்து பரசுராமரை பெற்றெடுக்கிறாள்.கணவரின் பூஜைக்கு கமண்டல நதியில் நீர் முகந்திடும்போது வானவீதியில் சென்ற கந்தர்வன் சாயையை நீரிலே கண்டு அவன் அழகில் மயங்கி ஆச்சர்யப்பட்டதால் மண்குடம் உடைந்து நீர் உடம்பெல்லாம் நனைந்ததை முனிவனர் ஞானக்கண்ணால் கண்டு கோபம் கொண்டார். மகன் பரசுராமரை அழைத்து தாயின் தலையை வெட்டிக் கொண்டு வரும் படி கூற அவ்வாறே அன்னையின் தலையை பரசுராமர் கொண்டுவந்தார்.இருப்பினும் பெற்ற தாயை வெட்டிய கையை வெட்டி விட்டேன் என்று கூற முனிவரும் வரம் கேள் தருகிறேன் என்று பரசுராமரிடம் கூறினார்.தன் தாயை உயிர்ப்பித்து கொடுக்கும்படி கேட்டார்.முனிவர் கமண்டல நீரை மந்திரம் ஓதி தந்தார்.
அதைபெற்றுக் கொண்டு வெட்டுப்பட்டுக் கிடக்கும் தன் தாய் சடலம் அருகே சென்று தவறுதலாக தாயின் தலையை வேறொரு பெண்ணின் உடம்போடு ஒட்ட வைத்து தண்ணீரை தெளிக்க உயிர் பெற்றார்.இதற்கிடையில் கார்த்தவீரிய அர்ச்சுனன் முனிவரிடம் இருந்த காமதேனுவை கேட்டும் தர மறுத்ததால் அவரைக் கொன்று காமதேனுவை கவர்ந்து செல்கிறான்.கணவர் இறந்ததால் ரேணுகாதேவி உடன்கட்டை ஏறுகிறாள். அப்போது மழை பெய்ய கொப்புளங்களுடன் ஆடை இன்றி வேப்பிலை கட்டி மகன் பரசுராமனை சிந்தித்தாள்.பரசுராமன் வந்து கோபத்துடன் சென்று கார்த்தவீரியனை கொன்று சினத்துடன் திரும்ப சத்திரிய குலம் முழுவதும் அழிக்க சபதமிடுகிறான்.
பின் சிவபெருமான் வந்து நடந்திருப்பது விதிச் செயல் என்று சமாதானம் செய்தார்.பின் ஜமதக்கினி முனிவரை உயிரத்தெழ செய்கிறார்.அன்னை ரேணுகாதேவி சிவபெருமானிடம் வேண்டிக்கொண்டபடி சிரசு மட்டும் பிரதானமாகக் கொண்டு இப்பூலகில் பூஜைக் கருவாய் விளங்கவும் உடலின் மற்ற பிரிவுமுனிவருடன் சொர்க்கத்துக்கு சென்றாள்.
இவ்வாறே அன்னை ரேணுகை இப்பூவுலகில் சிரசை மட்டுமே பிரதானமாக கொண்டு படவேட்டில் அமர்ந்து அருள்பாலிக்கிறார்
முக்கிய திருவிழாக்கள்
*ஆடி மாதம் ஏழு வெள்ளிக் கிழமைகளும் இத்தலத்தில் மிகவும் விசேசமாக இருக்கும்.இந்த விசேச நாட்களின் போது மட்டும் 10 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து அம்மனை வழிபடுகிறார்கள்.
*புரட்டாசி மாதம் நவராத்திரி கொலு
*ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பின் போதும் இக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் பெருமளவில் இருக்கும்.
*மார்கழி பூஜை, தைமாதம் வெள்ளிக்கிழமைகள் ஆகியவை இத்தலத்தில் சிறப்பான விழா நாட்கள் ஆகும்.
*வருடத்தின் மிக முக்கிய விசேச நாட்களான தமிழ், ஆங்கில புத்தாண்டு தினங்கள், தீபாவளி, பொங்கல் ஆகிய தினங்களிலும் கோயிலில் சுவாமிக்கு விசேச அபிசேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.அப்போது கோயிலில் பெருமளவில் பக்தர்கள் கூடுவார்கள்.
பொது தகவல்கள்
*முக்கிய ஊர்களிலிருந்து தூரம் :
வேலூர் 42 கி.மீ.
திருவண்ணாமலை 52 கி.மீ
ஆரணி 22 கி.மீ.
போளூர் 23 கி.மீ.
*தங்கும் வசதி :
குடும்பத்தோடு வரும் பக்தர்கள் வேலூர் அல்லது ஆரணி நகரில் உள்ள தனியார் லாட்ஜ்களில் தங்கிகொண்டு கோயிலுக்கு சென்று வரலாம்.
*கட்டணம் : ரூ.200 முதல் 400 வரை
*போக்குவரத்து வசதி :
பஸ்வசதி : வேலூர் திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் சந்தவாசல் என்ற ஊரிலிருந்து பிரிந்து செல்லும் சாலையில் 8 கி.மீ. தொலைவில் படவேடு உள்ளது.காஞ்சிபுரம், வேலூர்,போளூர், ஆற்காடு, ஆரணி முதலிய இடங்களிலிருந்து படவேட்டிற்கு பேருந்து வசதி உள்ளது.
அருகில் உள்ள ரயில் நிலையம் : களம்பூர், ஆரணி
அருகில் உள்ள விமான நிலையம் : சென்னை

அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில் திருவேற்காடு
1.அம்மன் : தேவிகருமாரி
2.பெருமை : சுயம்பு
3.சிறப்பம்சம் : நாகபுற்று
4.விசேசம் : விளக்குபூஜை
5.தலமரம் : வெள்வேலம்
6.தீர்த்தம் : புஷ்கரணி
7.பதிகம் : தேவாரம்
8.ஊர் : திருவேற்காடு
9.புராணபெயர் : வேலங்காடு
10.மாவட்டம் : திருவள்ளூர்
பிரார்த்தனை
அன்னையின் அருள் இங்கு வரும் பக்தர்களுக்கு திருமணம் வரம், குழந்தை வரம் வியாபார விருத்தி சுபிட்சம் ஆகியவற்றைத் தருகிறது.
தீராத நோய்களைத் தீர்தருளும் வேப்பிலையை மக்கள் அன்னையிடமிருந்து பக்தியுடன் பெற்று செல்கின்றனர்.வேப்பிலையும் பிரம்பும் கொண்டு மந்திரிக்கப்பட்டு பில்லி சூன்யம் மனநோய் போன்றவை நீங்கப்பெறுகின்றனர்.ராகு கேது கிரகங்களால் தோசம் உள்ளவர்கள் புற்றில் பால் ஊற்றினால் அம்மாதிரியான தோசங்கள் விலகுகின்றன.
நேர்த்தி கடன்
திருவிளக்குபூஜை:
பௌர்ணமி தோறும் 108 சுமங்கலி பெண்களால் மாலை வேளையில் 108 திருவிளக்கு பூஜை செய்யப்படுகின்றது.இந்த பூஜையைச் செய்பவர்கள் அவரவர் ஈடுபாட்டிற்கு ஏற்ப பலன்களை அடைந்து வாழ்வில் உயர் நிலை பெறுகின்றனர்.
பால் ஊற்றுதல்:
புற்றில் பாலூற்றி வழிபடுவோர்க்கு வாழ்வு அளித்து இராகு கேது போன்ற கிரகங்களால் வரும் தோஷங்களை நீக்குவேன் என்பது அன்னையின் அருள் வாக்கு.ஆடி உற்சவத்தின் போது புற்றுக்கு பால் ஊற்றுதல் சிறப்பு நிகழ்ச்சியாக செய்யப்படுகின்றது.
இவை தவிர முடிகாணிக்கை, தேர் இழுத்தல், குங்கும அபிசேகம் மாலை சாத்துதல், சங்காபிசேகம், கலசாபிசேகம், கல்யாண உற்சவம், பொங்கல் வைத்தல், அங்கபிரதட்சணம் , கண்ணடக்கம் ஆகியவை முக்கிய நேர்த்திகடன்களாக பக்தர்களால் இத்தலத்து அம்மனுக்கு செலுத்தப்படுகிறது.
கோயிலின் சிறப்பம்சம்
*பிரம்பு மந்திரிப்பு
கலிகாலத்தில் அநீதியும் அக்கிரமும் மலிந்து நல்லவர்களும் மதி மயங்கி தீயவர்களாக மாறி விடும் நிலை ஏற்பட்டது. அவர்கள் படும் இன்னல்களை நீக்க வேண்டும் என்று முனிவர்கள் நாராயணனைத் துதித்தார்கள். பின் சிவபெருமானையும் எழுந்தருளச் செய்துவிவாதித்தனர். முடிவாக எல்லோரும் திருவேற்காட்டுறை அரசியாம் கருமாரித்த தெய்வத்தை சரணடைதலே சரி என்று தீர்மானித்து திருவேற்காடு வந்து அன்னையை போற்றி நின்றனர். அன்னையும் அமைதியே வடிவான முகத்தில் கோபக்கனல் வீச திருஞானப் பிரம்பெடுத்து வேகத்துடன் சுழற்றி நல்லோர் வாழவும் தீயோர் அழியவும் சூளுரைத்தாள். இன்னும் தேவி உபாசகர் தம் பிரம்பால் மந்திரிக்கப் பெற்றவர்கள் உடல் நோய் மனநோய்களிலிருந்து விடுபட்டு அன்னையின் அருள் பெற்று நலத்துடன் வாழ்கின்றனர்.
தல பெருமைகள் :
*அம்மன் இத்தலத்தில் சுயம்பு என்பது விசேசம்
*மிகப்பெரிய நாகப்பெரிய நாகப் புற்று உள்ளது.
*தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து போய்க்கொண்டிருக்கும் சிறப்பு வாய்ந்த தலம்
*மிக அதிகமான வருவாயை தமிழக அரசுக்கு ஈட்டித்தரும் கோயில்களில் இது முக்கியமானது.
*குறி சொல்லும் இடமாக இருந்து பின்பு படிப்படியாக 50 வருடத்திற்குள் மிகவும் புகழ் பெற்று விளங்கிக் கொண்டிருக்கும் கோயில்.
*சுவாமி இராமதாசர் என்னும் மகான் தான் இத்தலத்தில் ஆரம்பத்தில் குறிசொல்லிக்கொண்டிருந்தார்.அவரால்தான் இக்கோயில் பிரபலடைந்தது என்கிறார்கள்.
*மரச்சிலை அம்மன் என்ற சன்னதி இத்தலத்தில் உண்டு.இங்கு ரூபாய் நோட்டு மாலையாக அம்மனுக்கு அணிவிக்கப்படுகிறது.இந்த சந்நிதியில் நாணயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. கடன் கந்து வட்டி தீர்தல்,வியாதி வழக்குகளில் நொடிந்து போனவர்கள் இத்தலத்தில் வேண்டிக்கொள்கின்றனர்.பூட்டுகளை கொண்டு வந்து சந்நிதி முன்பாக பூட்டி தொங்க விட்டுச் செல்வது வழக்கமாக உள்ளது.இப்படிச் செய்வதால் தங்கள் பிரச்சினைகள் தீர்வதாக கூறுகிறார்கள்
தல வரலாறு :
சிவபெருமான் தேவர்களின் துன்பம் நீங்கும் பெருõட்டு தேவலோகம் செல்ல வேண்டிவந்தது. அப்போது உமையாளிடம் நீயே சிவனும் சக்தியுமாகி ஐந்தொழிலையும் (ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) இந்த திருநீற்றினால் அருள்புரிவாயாக என்று கூறிச் சென்றார். அம்மையும் அகத்தியரிடம் தாம் ஆட்சி செய்ய தகுந்த இடம் வேண்டும் என கேட்க வேற்கண்ணி அருகில் வந்து இதுதான் சரியான இடம் என வேற்காட்டை சுட்டிக்காட்ட அவ்விடத்திலேயே தேவி ஏழு சக்திகளாகி(1. அந்தரக்கன்னி 2.ஆகாயக்கன்னி .3 பிõமணக்கன்னி 4. காமாட்சி 5.மீனாட்சி .6.விசாலாட்சி 7.கருமாரி ) செங்கோல் ஏந்தி காட்சி தந்தாள்.
இதில் கருமாரி திருவேற்காட்டில் கோயில் கொண்டு இரு உருவாய் ஆட்சி செய்தாள். பிறகு ஆறு சக்திகளும் அவரவர் இடம் சென்றனர். சக்தியாகிய கருமாரிஇரண்டு உருவம் கொண்டாள். முதல் உருவம் பிரகாசத்துடன் இருந்தது.இரண்டாவது நீலநிறத்துடன் பெரிய உருவாக நின்றது.அதோடு மகாவிஷ்ணுக்கு காட்சி தந்தாள். இக்காட்சியை அகத்தியர் கண்டு போற்றினார்.அப்போது அம்மன் அகத்தியரைப் பார்த்து முனிவா நான் உலக மக்கள் உய்வதற்காக பாம்பு உருவம் கொண்டு புற்றில் அமர்ந்து பலயுகாந்த காலங்கள் அருளாட்சி செய்வேன், கலியுகத்தில் இப்போது இருக்கும் உருவத்துடன் திருக்கோயில் பெற்று விளங்குவேன் என்று கருநாக வடிவம் எடுத்தாள்.இவ்வாறு கருநாக வடிவம் எடுத்து அமர்ந்த புற்று இன்றும் இத்திருக்கோயிலின் அருகே உள்ளது.
முக்கிய திருவிழாக்கள்
*ஆடிப் பெருந்திருவிழா
ஆனி கடைசி ஞாயிறு முதல் 12 வாரங்கள் தொடர்ந்து அன்னை கருமாரிக்கு ஆடிப் பெருந்திருவிழா சீருடனும் சிறப்புடனும் நடைபெறும்.செவ்வாய் வெள்ளி ஞாயிறு தினங்களில் 1008 பால் அபிசேகம் நவகலசம் சந்தனகாப்பு மஞ்சன காப்பு புற்றலங்கார 108 பால் குடம் படையல் போன்றவவையும் தினந்தோறும் ஒவ்வொரு வாகனத்தில் திருவீதி உலாவும் நடைபெறும். ஞாயிறு காலை மற்றும் மாலைகளில் சொற்பொழிவு இன்னிசை பரதநாட்டிய கச்சேரிகள் நடைபெறும். ஒன்பதாம் ஞாயிறு காøல் தேர் உலா மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.
*தை மாதம் பிரம்மோற்சவம்
தை மாதத்தில் 19 நாட்கள் இத்திருவிழா நடக்கும். அம்மன் அழகிய அலங்காரத்துடன் வீதி உலா வரும் காட்சி காண்போரை பக்தி பரவசமடையச் செய்யும். தீர்த்த வாரி , தெப்ப உற்சவம் ஆகியவை சிறப்பாக நடைபெறுகிறது.இத்திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர்
*மாசிமகம், நவராத்திரி திருவிழாவின் போதும் பக்தர்கள் வெள்ளமாக கோயில் காட்சி தரும் என்பது குறிப்பிடத்தக்கது.
*பௌர்ணமி, செவ்வாய் வெள்ளி கிழமைகளில் கோயிலில் பக்தர்களின் வருகை பெருமளவில் இருப்பது சிறப்பு
*தமிழ், ஆங்கில வருடபிறப்பு,தீபாவளி, பொங்கல் ஆகிய விசேச நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெறும் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்
பதிகம் பாடியோர் : திருவேற்காடு தேவராம் என்ற பாடலில் ஞானசம்பந்தர் வேற்காட்டு தலத்தைப் பற்றி பாடியுள்ளார். அருணகிரிநாதரும் இத்தலம் குறித்தது தனது பாடல்களில் பாடியுள்ளது சிறப்பு.
பொது தகவல்கள்
முக்கிய ஊர்களிலிருந்து தூரம் :
சென்னை யிலிருந்து 20 கி.மீ.
பூந்தமல்லி யிலிருந்து 8 கி.மீ
தங்கும் வசதி :
குடும்பத்தோடு வரும் பக்தர்கள் பூந்தமல்லியில்லியில் உள்ள தனியார் லாட்ஜ்களில் தங்கிகொண்டு கோயிலுக்கு சென்று வரலாம்.
கட்டணம் : ரூ.200 முதல் 400 வரை
போக்குவரத்து வசதி :
பஸ்வசதி : சென்னை பூந்தமல்லி சாலையில் வேலப்பன் சாவடி அருகில் பிரிந்து செல்லும் ரோட்டில் திருவேற்காடு இருப்பதலால் சென்னையிலிருந்து எளிதில் பேருந்து மூலம் திருவேற்காடு சென்றடையலாம்.சென்னை தவிர தாம்பரம், திருவள்ளூர் , காஞ்சிபுரம் நகரங்களிலிருந்தும் திருவேற்காட்டிற்கு பஸ் வசதி நிறைய உண்டு.
அருகில் உள்ள ரயில் நிலையம் : ஆவடி,சென்னை.

அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில், சிறுவாச்சூர்
அம்மன் : மதுரகாளி
தோற்றம் : அருளும்நிலை
விசேசம் : மாவிளக்கு
தரிசன : திங்கள்
நாட்கள் : வெள்ளி
காவல்தெய்வம் : அய்யனார்
தலமரம் : மருதமரம்
தீர்த்தம் : திருக்குளம்
ஊர் : சிறுவாச்சூர்
மாவட்டம் : பெரம்பலூர்
பிரார்த்தனை
கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இத்தலத்தில் பெருமளவில் வந்து வழிபடுகின்றனர்.
நோய்கள், மற்றும் உடல் உபாதைகள், வழக்கு சிக்கல்கள், காணாமற் போன பொருட்கள், வியாபார சிக்கல் முதலிவற்றுக்கு இங்குள்ள அம்மனை வழிபட்டால் தீர்வு கிடைக்கிறது.
பில்லி, சூனியம் வைத்த மந்திரவாதியை அன்னை அழித்ததால் பில்லி, சூனியம் போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகள் இத்தலம் வந்து தொழ விலகிச் சென்று விடுகின்றன.குறைகள் எல்லாம் மனமுருக அன்னை முன் முறையிடக் கரைந்து காணாமற்போய் விடுகின்றன.
மிகவும் சக்தி வாய்ந்த தெய்வாமாக இம்மாரித் தாய் இருப்பதால் இங்கு வரும் தனது பக்தர்களின் அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றுகிறாள் என்பது இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
நேர்த்தி கடன்
மாவிளக்கு ஏற்றுதல் இத்தலத்தின் முக்கிய நேர்த்திகடன் ஆகும்.வயிறு, நெற்றி, நெஞ்சு, கால், கை என்று நேர்ந்து கொண்டு அந்த பாகத்தில் மாவிளக்கு வைத்து அம்மனிடம் பிராத்தனை செய்கிறார்கள். சிறுவாச்சூர் காளியம்மன் என்றாலே இந்த மாவிளக்கு நேர்த்திகடன் என்பதுதான் மிகவும் பிரபலம்.இவை தவிர இத்தலத்தில் அங்கபிரதட்ணம் செய்வதும் பக்தர்களால் செய்யப்படும் புகழ்பெற்ற நேர்த்திகடன் ஆகும்.இவை தவிர பக்தர்கள் அம்மனுக்கு பாலாபிசேகம் , அபிசேக ஆராதனைகள் ஆகியவற்றை செய்கிறார்கள்.
*அன்னதானம் செய்தல், தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகள் ஆகியவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்திகடன்களாக செய்கின்றனர்.
கோயிலின் சிறப்பம்சம்
*தரிசன நாட்கள் : வாரத்தில் திங்கள், வெள்ளி ஆகிய இருநாட்கள் மட்டுமே திறக்கப்பட்டு பூஜை நடைபெறுகிறது. திருவிழா மற்றும் சில குறிப்பிட்ட பண்டிகைகளின் போது மட்டும் பிற நாட்களிலும் ஆலயம் திறக்கப்படுகிறது.காலை 8 மணிக்கு சந்நிதி திறக்கப்படும்.காலை 11 மணிக்கு மேல் அம்மனுக்கு அபிசேகம் நடைபெறும். பிற்பாடு தங்கக் கவசம் அணிவிக்கப்படும். இரவு 8 மணி வரை தொடர்ந்து தரிசனம் செய்யலாம். உபயதாரர் இருப்பின் மாலை 6 மணிக்கு சந்தனக் காப்பு நடைபெறும்.
*மாவிளக்கு : இத்தலத்தில் மிகப்புகழ்பெற்ற நேர்த்திகடன் என்பது இந்த மாவிளக்கு நேர்த்திகடன் என்பதாகும்.வெளியில் எங்கும் மாவிளக்கு மாவு தயாரிக்காமல் ஆலய வளாகத்திற்குள் அரிசி கொணர்ந்து ஊற வைத்து இடித்து இங்கேயே மாவிளக்கு மாவு தயார் செய்கிறார்கள்.பின்பு அதனுடன் நெய்விளக்கு அன்னை சந்நிதியில் ஏற்றித் தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.இதற்காக மாவு இடிக்கத் தனியிடம் ஒதுக்கப்பட்டு உரல்களும்,உலக்கைகளும் ஆலயம் மூலமாகவே வைக்கப்பட்டுள்ளன.இடிக்க முடியாத பக்தர்களுக்கு கூலிக்கு மாவிடித்துத் தர பணியாளர்களும் உள்ளனர்.
தல பெருமைகள் :
*மதுரைக் காளியம்மன் என்ற திருப்பெயரே பின்னாட்களில் மருவி மதுர காளியம்மனாக வந்ததாகக் கூறுகிறார்கள்.
*அம்மன் சுமார் 4 அடி உயரமாக இருக்கிறார்.
*வடக்கு நோக்கிய சந்நிதியில் அம்மன் அருள்பாலிக்கிறார்.
*அன்னை வடக்கு நோக்கி அமர்ந்துள்ளாள்.
*நான்கு திருக்கரங்கள் இவற்றில் உடுக்கை, பாசம், சூலம், அட்சய பாத்திரம் ஆகியவற்றை ஏந்தியுள்ளாள்.
*இடது திருவடியை மடித்த நிலையில் வைத்து வலது திருவடியை சிம்மத்தின் மீது ஊன்றி அமர்ந்த திருக்கோலம்.
*திருவடியில் அரக்கன் இல்லாததால் அழிக்கும் தொழிலில் காட்சியில்லை.அருளும் நிலையிலேயே காட்சி.
*1000 வருடங்களுக்கு முந்தைய கோயில்.
*குலோத்துங்க சோழனால் திருப்பணி செய்யப்பட்ட கோயில்.
*மலைகளும் ஏரியும் குளமும் தோப்புகளும் வயல்களும் சூழ்ந்துள்ள மனதிற்கினிய சூழலில் ஊரின் எல்லையில் அன்னையின் திருக்கோயில் அமைந்துள்ளது.
*எழிலார்ந்த ராஜ கோபுரம் அனைவரையும் வருக வருகவென அழைக்கிறது.
*பிரம்மேந்திர சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஸ்ரீ சக்கரம் இங்குள்ளது.
*செல்லியம்மன் தனக்கு முதல் மரியாதை வேண்டுமென்று கேட்டதற்கு ஏற்ப பூஜையின் போது தீபாராதனை காட்டுகையில் முதலில் மலை நோக்கி மேலே தீபாராதனை காட்டி விட்டுத்தான் பிற்பாடு மதுர காளியம்மனுக்குத் தீபாராதனை காட்டும் பழக்கம் நடைமுறையில் உள்ளது.
*அன்னை மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம், ஒரு முறை தரிசனம் செய்தவர் மீண்டும் மீண்டும் வந்து தரிசனம் செய்து மனநிறைவு பெற்றுச் செல்கின்றனர்.
*வெளி மாநிலங்கள் குறிப்பாக வட இந்தியாவிலிருந்து நிறைய பக்தர்கள் வருகிறார்கள்.பெரிய பெரிய வி.ஐ.பி.க்கள் வந்து வழிபடக் கூடிய கோயிலில் இது முக்கியமானது.
தல வரலாறு :
சிலப்பதிகார நாயகி கண்ணகி மதுரையை எரித்தபின் மனஅமைதி கொள்ளாமல் இத்தலம் வந்து அமைதி கொண்டாள் என்று செவிவழிச் செய்திகள் கூறுகின்றன. சிறுவாச்சூரின் வழிபடு தெய்வம் செல்லியம்மன் ஆகும்.ஒரு மந்திரவாதி தனது மந்திர வலிமையால் இவ்வம்மையைக் கட்டுப்படுத்தித் தீய செயல்களுக்குப் பயன்படுத்தி வந்துள்ளான்.மதுரை காளியம்மன் இத்தலத்திற்கு ஒரு வெள்ளிக்கிழமை இரவு வந்து சேர்கிறாள். செல்லியம்மனுடன் இரவு தங்க இடம் கேட்கிறாள்.செல்லியம்மனோ தன்னை மந்திர வலிமையால் தொல்லைப்படுத்தும் மந்திரவாதி பற்றிக் கூறுகிறாள். மதுரைக் காளியம்மனோ தான் அதற்குத் தக்க வழி செய்வதாகக் கூறித் தங்குகிறாள்.வழக்கப்படி வந்த மந்திரவாதியை அன்னை எதிர்கொண்டு அழித்து விடுகிறாள்.
செல்லியம்மன் அன்னை திறம் கண்டு இனி அவளே சிறுவாச்சூர் ஆலயத்திலிருந்து அடியார்கட்கு அருள் பாவித்து வர வேண்டுகிறாள். தான் அருகிருக்கும் பெரியசாமி மலை சென்று விடுவதாகவும் ஆனால் கோயிலில் எப்பொழுதும் தனக்கு முதல் மரியாதை வேண்டுமெனவும் கூறுகிறாள். மதுரைக் காளியம்மனும் அதற்கு ஒப்புக்கொண்டு ஆலயத்தில் அமர்கிறாள்.சிறுவாச்சூருக்கு வெள்ளிக்கிழமை வந்த மதுரைக் காளியம்மன் பக்தர்களுக்கு திங்கள் கிழமை காட்சி தருகிறாள்.எனவேதான் திங்கள் வெள்ளி மட்டுமே ஆலயம் திறந்திருக்கும்.மற்ற நாட்களில் மதரகாளியம்மன் செல்லியம்மனுடன் பெரியசாமி மலையில் தங்குவதாகக் கூறுகிறார்கள்.
முக்கிய திருவிழாக்கள்
*சித்திரைத் திருவிழா : ஆண்டுதோறும் சித்திரைத் திங்களில் அம்மாவாசைக்குப் பின்வரும் முதல் செவ்வாயன்று பூச்சொரிதல் தொடங்கும், அதற்கடுத்த செவ்வாயன்று பூச்சொரிதல் தொடங்கும், அதற்கடுத்த செவ்வாய் காப்பு கட்டி 13 நாட்கள் பெருந்திருவிழா சிறப்புடன் நடைபெறுகிறது.பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொள்கிறார்கள்.இத்திருவிழாவில் மலை வழிபாடு, திருக்கல்யாணம், வெள்ளிக் குதிரை வாகனம், திருத்தேர் முதலியன முக்கிய திருவிழா நாட்களாகும்.இத்திருவிழா நாட்களில் ஆலயம் திறக்கப்பட்டு பூஜை நடைபெறும்.
*சிறப்பு வழிபாடு : மேலும் தமிழ் ஆங்கிலப்புத்தாண்டு நாட்கள் , ஆடி 18 ம் பெருக்கு புரட்டாசி நவராத்திரி 10 நாட்கள், ஐப்பசியில் தீபாவளித் திருநாள்.கார்த்திகையில் தீபத்திருநாள்,, மார்கழி மாதப்பிறப்ப, வைகுண்ட ஏகாதேசி, தைப் பொங்கல், தைப்பூசம்,மாசியில் சிவராத்திரி ஆகிய சிறப்பு நாட்களிலும் ஆலயம் திறக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது.
பொது தகவல்கள்
முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : திருச்சியி 41 கி.மீ.
பெரம்பலூர் 8 கி.மீ.
தங்கும் வசதி : குடும்பத்தோடு வருபவர்கள் திருச்சி நகரில் தங்கி கோயிலுக்கு வந்து தரிசனம் செய்யலாம்.திருச்சி நகரில் நிறைய தனியார் லாட்ஜ்கள் உள்ளன.
கட்டணம் ரூ.150 முதல் ரூ.800 வரை.
போக்குவரத்து வசதி : *திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூர் இருக்கிறது.அங்கிருந்து 1 கி.மீ. தொலைவில் கோயில் இருகிறது.எனவே எளிதில் கோயிலை சென்றடையலாம்.திருச்சியிலிருந்து பெரம்பலூர் அல்லது சென்னை செல்லும் பேருந்துகள் அனைத்தும் இங்கு நிற்கின்றன.
*அருகிலுள்ள ரயில் நிலையம் திருச்சி

புதன், ஜூன் 21
அருள்மிகு முத்து மாரியம்மன் திருக்கோயில்,நார்த்தாமலை
அம்மன் : முத்துமாரியம்மன்
பிறபெயர் : பூவாடைக்காரி
தல விருட்சம் : வேம்பு
விசேசம் : முருக எந்திரம்
தீர்த்தம் : ஆகாச ஊரணி
பிறதீர்த்தம் : தளும்புசுணை
ஊர் : நார்த்தாமலை
புராணபெயர் : நாரதகிரிமலை
பிறபெயர் : நகரத்தார்மலை
மாவட்டம் : புதுக்கோட்டை
பிரார்த்தனை
*குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கரும்பு தொட்டில் செய்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கிறது.
*அக்னி காவடி எடுத்தால் தீராத வியாதிகள் குணமாகின்றன.
*அம்மை வியாதிகள் குணமாகும்
நேர்த்தி கடன்
*மாவிளக்கு , அக்னி காவடி,கரும்பு தொட்டில், பறவை காவடி எடுத்தல்
*அம்மனுக்கு விளக்கு போடுதல்,அம்மனுக்கு புடவை சாத்துதல் , ஆகியவை தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகள் செய்தல் ஆகியவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்திகடன்களாக செய்கின்றனர்.
*இவை தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கல்
கோயிலின் சிறப்பம்சம்
நாடு போற்றும் நார்த்தாமலை
நல்லவர்களின் நாட்டமும் மன்னர்களின் கண்ணோட்டமும் பெற்ற நார்த்தாமலை மேலமலை, கோட்டை மலை, கடம்பர் மலை, பறையர் மலை, உவக்கன் மலை , ஆளுருட்டிமலை, பொம்மாடிமலை,மண்மலை, பொன்மலை, என்ற ஒன்பது மலைக்குன்றுகளுக்கு மத்தியில் ஓங்காரமாய் அமைந்து விளங்குகிறது.அங்கு நிமிர்ந்து நிற்கும் மலைக்குன்றுகள் ஒவ்வொன்றும் ஒரு பழங்கதையை உணர்த்தும் விதமாய் அமைந்துள்ளன.இராம இராவண போரில் மாண்ட வீரர்களை உயிர்ப்பிக்க வடக்கிலிருந்து சஞ்சீவி மலையை வாயு புத்திரனாகிய அனுமான் அடியோடு பெயர்த்து வான் வழியே அதைத் தூக்கி வரும் போது அம்மலையிலிருந்து சிதறி விழுந்த சிறு துகள்கள்தான் நார்த்தாமலையில் உள்ள இக்குன்றுகள் என்பதே அக்கதையாகும்.நிறைய மூலிகை தாவரங்கள் இம்மலையில் இருக்கிறது என்பது முக்கிய விசயம்.
நாரத்தாமலை பெயர்க்காரணம் :
நாரதர் பெருமான் இம்மலையில் வந்து தங்கியதால் நாரதர் மலை என்று வழங்கப்பட்டதாகவும் காலப்போக்கில் நார்த்தாமலை என்று வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தீர்த்தம் : ஆகாச ஊரணி,தலவர் சிங்கம்,தளும்பு சுணை,பொழுதுபடாசுணை
ஊர் : நார்த்தாமலை நாரதகிரி மலை, நகரத்தார் மலை
தல பெருமைகள் :
*350 வருட பழமையான கோயில்
*அம்மன் சன்னதியின் வடபுற சுவற்றில் பதிக்க பட்டிருக்கும் கல்லிலாலான முருகன் எந்திரம் மிகவும் விஷேசம் என்று கருதப்படுகிறது.
*தேவ ரிஷி நாரதர் இங்கு தங்கி தவம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
*குழந்தை வரத்துக்கு அம்மாவட்டத்திலேயே மிகவும் புகழ்பெற்ற கோயில் இது.
*அம்மை நோய் கண்டவர்கள் இத்தலத்தில் வழிபட்டால் குணமடைவதால் இத்தலத்தில் பக்தர்கள் வருகை மிக அதிக அளவில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க அம்சம்.
தல வரலாறு :
இத்திருக்கோயிலின் அம்மன் சிலை நார்த்தாமலையிலிருந்து சுமார் 4 கல் தொலைவிலுள்ள கீழக்குறிச்சி என்னும் கிராமத்தில் ஒரு வயலில் கண்டெடுக்கப்பட்டு இங்கு கொண்டு வந்து சேர்த்ததாகவும், இச்சிலையை இந்த ஊரில் உள்ள குருக்கள் பிரதிஷ்டை செய்து, சிறிய கோயில் ஒன்று எழுப்பியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் திருவண்ணாமலை ஜமீன்தார் வம்சத்தைச் சேர்ந்த மலையம்மாள் என்பவர் இங்கு வந்து அம்பாளின் அருளினால் தன் சொந்த முயற்சியால் இத் திருக்கோயிலை விரிவுபடுத்தியும், மண்டபஙகள் எழுப்பியும் விழாக்கள் நடத்தியும் புகழ் பெறச் செய்ததாகக் கூறப்படுகிறது.
முக்கிய திருவிழாக்கள்
*பங்குனித் திருவிழா 10 நாட்கள் நடக்கும் இந்த பங்குனித்திருவிழா இத்தலத்தின் மிக உச்சமான திருவிழா ஆகும். அத்தகைய சிறப்பு வாய்ந்த இவ்விழாவில் 5 லட்சம் பக்தர்கள் திரள்வது முத்துமாரியம்மன் அருளுக்கும் ஆட்சிக்கும் சாட்சி.
*ஆடிக் கடைசி வெள்ளி ஒரே ஒருநாள் மட்டுமே நடக்கும் திருவிழா என்றாலும் அன்றைய தினமும் நாலாபுறமும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து அம்மனின் அருள் பெறுவது சிறப்பு
*தமிழ், ஆங்கில வருடபிறப்பு,விஜய தசமி , தீபாவளி, பொங்கல் ஆகிய விசேச நாட்களில் அம்மன் தங்கரதத்தில் வரும் போது ஏராளமான பக்தர்கள் கண்டுகளிப்பர்.
* வாரத்தின் செவ்வாய், வெள்ளி கிழமைகளில் பக்தர்கள் வருகை மிக அதிகமாக இருக்கும்.
பொது தகவல்கள்
முக்கிய ஊர்களிலிருந்து தூரம் :
திருச்சியிலிருந்து 35 கி.மீ.
புதுக்கோட்டையிலிருந்து 18 கி.மீ.
தங்கும் வசதி : *குடும்பத்தோடு வருபவர்கள் புதுக்கோட்டை நகரிலேயே தங்கி, கோயிலுக்கு வந்து தரிசனம் செய்யலாம்.
கட்டணம் ரூ.150 முதல் ரூ.400 வரை.
போக்குவரத்து வசதி : *திருச்சி புதுக்கோட்டை நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து செல்லும் பாதையில் இருக்கிறது.புதுக்கோட்டையிலிருந்து பேருந்து வசதி உண்டு.
*அருகிலுள்ள ரயில் நிலையம் நார்த்தாமலை, திருச்சி.

அருள்மிகு அஷ்டலட்சுமி திருக்கோயில் பெசன்ட் நகர், சென்னை
1.பெருமாள் : மகாவிஷ்ணு
2.தாயார் : மகாலட்சுமி
3.உடல்நலம் : ஆதிலட்சுமி
4.உணவு : தான்யலட்சுமி
5.தைரியம் : தைரியலட்சுமி
6.சௌபாக்கியம் : கஜலட்சுமி
7.குழந்தைவரம் : சந்தானலட்சுமி
8.வெற்றி : விஜயலட்சுமி
9.படிப்பு : வித்யலட்சுமி
10.செல்வம் : தனலட்சுமி
பிரார்த்தனை
இங்கு அஷ்ட லட்சுமிகளாக அருள் பாலிக்கும் மகாலட்சுமியை வணங்கினால் சிறப்பு வாய்ந்த வாழ்க்கை அமைய பெறலாம்.தனித்தனி சன்னதிகளில் அருள் பாலிக்கும் ஒவ்வொரு தெய்வங்களும் தனித்தனி சிறப்பைபெற்றதாக உள்ளது.
உடல்நலம்பெற ஆதிலட்சுமியை வணங்குதல் நலம்
பசிப்பிணி நீங்க தான்யலட்சுமியை வணங்குதல் நலம்
தைரியம் பெற தைரியலட்சுமியை வணங்குதல் நலம்
சௌபாக்கியம் பெற கஜலட்சுமி யை வணங்குதல் நலம்
குழந்தைவரம் வேண்டுமெனில் சந்தானலட்சுமியை வணங்குதல் நலம்
காரியத்தில் வெற்றி கிடைக்க விஜயலட்சுமியை வணங்குதல் நலம்
கல்வி ஞானம் பெற வித்யாலட்சுமியை வணங்குதல் நலம்
செல்வம் பெருக தனலட்சுமியை வணங்குதல் நலம்
நேர்த்தி கடன்
வேண்டிய வரங்ள் எல்லாம் கிடைக்கும் இத்தலத்தில் அபிசேக ஆராதனைகள், புடவை சாத்துதல் ஆகியவையும், பிரசாதம் செய்து விநியோகிப்பதும் இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது.
தல வரலாறு :
சுமார் 25 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கோயில் பெருமளவு பக்தர்கள் வருகையினால் நாளடைவில் சென்னையின் மிகவும் புகழ்பெற்ற கோயிலாக ஆனது.அதோடு சென்னை பெசன்ட் நகர் பீச் மிகவும் புகழ் பெற்றது.இந்த பீச்சுக்கு அருகில் இக்கோயில் அமைந்துள்ளதால் "பக்தர்கள் தவிர ஏராளமான சுற்றுலா பயணிகளும் இக்கோயிலுக்கு வருகை தருகின்றனர்.சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் என்ற ஊரில் இருக்கும் பெருமாள் கோயில் மாடலைப் போலவே இக்கோயில் அடுக்கடுக்காக கட்டப்பட்டுள்ளது மிகவும் விசேசம்.அருமையான சலவைக் கற்களால் கட்டப்பட்டுள்ள இக்கோயிலில் உள்ள சுதைகள் மிகவும் அழகுற அமைக்கப்பட்டுள்ளன
கோயிலின் சிறப்பம்சம்
*8 லட்சுமிகளும் ஒரே கோயிலில் தனித்தனி சன்னதிகளில் வீற்றிருப்பது சிறப்பு
*கோபுரத்தில் ஓம்கார வடிவத்தில் அஷ்டாங்க விமானத்துடன் கூடியதாக திருக்கோயில் அமைந்துள்ளது (ஓம்கார ஷேத்திரம்)
*கடல் அருகே அமைந்திருக்கும் அழகிய திருக்கோயில்
*கோபுரத்தின் நிழல் பூமியில் விழாது.இது தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தின் சிறப்பை ஒட்டி அமைந்துள்ளது.
*பெருமாள் நின்ற கல்யாணத் திருக்கோலம் தாயார் 9 கஜம் மடிசார் புடவை கட்டி நிற்கின்றனர்.
*ஆறுகால பூஜைகள் இத்தலத்தில் நடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்க அம்சம்
*இங்கு முழுக்க முழுக்க நெய் விளக்குகள் மட்டுமே ஏற்றப்படுகின்றன.ள் கூட்டம் அலைமோதும் தலம்.
முக்கிய திருவிழாக்கள்
*புரட்டாசி நவராத்திரி திருவிழா 10 நாட்கள் இத்தலத்தில் பத்து விதமான அலங்காரங் களில் திருவிழா நடைபெறும் இத்திருவிழாவின் போது பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கூடுவர்
*தீபாவளி, லட்சுமி பூஜை, தை வெள்ளி, ஆடி வெள்ளி ஆகிய நாட்களில் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.அந்த தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருவர்.
ஹை லைட்ஸ்
தலமரம் : வில்வ மரம்
விமானம் : அஷ்டாங்க விமானம்
தீர்த்தம் : சமுத்திர புஷ்கரணி(வங்கக் கடல்)
பொது தகவல்கள்
முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : சென்னை நகரின் மத்தியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் பெசன்ட் நகர் அமைந் துள்ளது.
தங்கும் வசதி :
குடும்பத்தோடு வரும் பக்தர்கள் சென்னை நகரில் உள்ள தனியார் லாட்ஜ்களில் தங்கிகொண்டு கோயிலுக்கு சென்று வரலாம்.
கட்டணம் : ரூ.200 முதல் 800 வரை
போக்குவரத்து வசதி :
பஸ்வசதி : சென்னையின் மிக முக்கிய பகுதியாவும் பெசன்ட் நகர் கடற்கரை புகழ் பெற்றதாக விளங்குவதாலும் பெசன்ட் நகருக்கு சென்னையின் மற்ற எல்லா பகுதியிலிருந்தும் பேருந்து வசதி நிறைய உள்ளது.
அருகில் உள்ள ரயில் நிலையம் : சென்னை.

திங்கள், ஜூன் 19
அருள்மிகு பகவதிஅம்மன் திருக்கோயில் கன்னியாகுமரி
அம்மன் : பகவதிஅம்மன
பிறபெயர் : தேவிகன்னியாகுமரி
இறைவி : தியாகசௌந்தரி
இறைவி : பால சௌந்தரி
முக்கிய தீர்த்தம் பாபநாசதீர்த்தம்
புகழ் : இந்தியதென்கோடி
சிறப்பு : சுற்றுலாதலம்
ஊர் : கன்னியாகுமரி
புராணபெயர் : குமரிகண்டம்
மாவட்டம் : கன்னியாகுமரி
பிரார்த்தனை
கன்னிகா பூஜை, சுயம்வர பூஜை ஆகியவை செய்தால் திருமண காரியங்கள் கைகூடுகிறது.
காசிக்கு போகிறவர்களுக்கு கதி கிடைக்க வேண்டுமாயின் இக்கன்னியாகுமரிக்கு வரவேண்டுமென்று நம் புராணம் முறையிடுகிறது.
இது சிறந்த தீர்த்தத் துறையையுடைய புண்ணிய கடற்கரையாகும் என்பதால் இங்கு நீராடினால் பாவம் தொலைந்து புண்ணியம் கிடைக்கும்.
நேர்த்தி கடன்
அம்மனுக்கு விளக்கு போடுதல்,அம்மனுக்கு புடவை சாத்துதல் , அன்னதானம் செய்தல் ஆகியவை தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகள் செய்தல் ஆகியவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்திகடன்களாக செய்கின்றனர்.
இங்குள்ள கடற்கரையில் பக்தர்கள் தங்கள் காலம் சென்ற மூதாதையார்களுக்கு காரியம் செய்ய எள்ளும் தண்ணீரும் இறைத்து பிதுர்கடன் செய்கிறார்கள்
தல பெருமைகள் :
*பரசுராமர் குமரிதெய்வ உருவை இவ்விடத்தில் அமைத்து வழிபட்ட தலம்.
*இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்த சிறப்பு வாய்ந்த தலம்
*பராசக்தியுறையும் கோயில் இந்தியா முழுமையும் பரந்த புகழுடையது.
*கடல் முனையில் இருந்தாலும் கோயிலுக்குள் உள்ள கிணற்றில் உப்புக் கரிக்காத நல்ல தண்ணீர் கிடைக்கிறது என்பது அதிசயம்.
*முன்பிருந்த கோயில் கடல் கொண்டு விட்டது.இப்போதிருப்பது இரண்டாவதாக பிரதிஷ்டை செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது.
*பிதுர்கடன் கழிக்க ஏற்ற தலம்.
*வடஇந்தியர்கள் வருகை அதிகம் உள்ள கோயில்
முக்கிய திருவிழாக்கள்
*புரட்டாசி நவராத்திரி திருவிழா 10 நாள்
*வைகாசி விசாகம் 10 நாள் தேரோட்டம், தெப்போற்சவம்10 ஆயிரம் பக்தர்கள் கூடுவர்.
இத்திருவிழா நாட்களில் காலையிலும் இரவிலும் ஊர் தெரு வழியாகத் தேவியின் திருவுருவம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். ஒன்பதாவது நாள் தேர்த்திருவிழாவும் பத்தாவது நாள் தெப்பத்திருவிழாவுமாகும். தெப்பத் திருவழிõவன்று நன்றாகக் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் தேவியின் திருவுருவம் நீரின் மேல்வலமாக மிதப்பில் கொண்டு செல்லப்படும்.
கோயிலின் சிறப்பம்சம்
இது முக்கடல் சங்கமிக்கும் பாரதத்தின் தென்கோடி முனை.கிழக்கே வங்கக்கடலும் தெற்கே இந்தியப்பெருங்கடலும் மேற்கே அரபிக்கடலும் கூடி அலைமோதும் அழகிய காட்சியுடையது.சில பௌர்ணமி நாளன்று, இக்கடல்கரையில் நின்று மாலைக் கதிரவன் மேலைக் கடலில் மறைவதையும் முழுமதி கீழைக் கடலில் கிளர்ந்தெழுவதையும் ஒரு சேரக் கண்டு களிக்கலாம்.
காந்தி மண்டபம்:
1948ல் தேசப்பிதா காந்தியடிகளின் அஸ்தி இங்கு கடலில் கரைக்கப்பட்டது. கரைக்கும் முன்பு அஸ்தி வைக்கப்பட்ட கலசம் ஒரு பீடத்தின் மீது வைத்து அஞ்சலி செய்யப்பட்டது. அவ்விடத்தில் ஒரு நினைவுச்சின்னம் கட்ட காந்தயடிகளின் சீடர் கிருபளானி மேற்கொண்ட முயற்சியால் 1954 ல் அடிக்கல் நாட்டி 1956 ல் அழகிய மண்டபமாக கட்டிமுடிக்கப்பட்டது.
காந்திஜி பிறந்த நாளான அக்டோபர் 2ந்தேதி சூரிய ஒளி பீடத்தின் மீது படும்படியாக அமைத்திருப்பது தனிசிறப்பு.சுற்றுலாப்பயணிகளை அதிகமாக கவர்ந்திழுக்கும் மண்டபமாக திகழ்கிறது.
விவேகானந்தர் நினைவு மண்டபம்
குமரி முனையின் கிழக்கே கடலில் இரண்டு அழகிய பாறைகள் உள்ளன.அதில் பெரிய பாறை சுமார் 3 ஏக்கர் பரப்பும் கடல் மட்டத்திலிருந்து 55 அடி உயரமும் உடையது.அதில் ஓரிடத்தில் பாதம் போன்ற அடையாளம் காணப்படுகின்றது.அதை தேவியின் திருப்பாதம் என்று அழைக்கிறார்கள்.1892 ல் சுவாமி விவேகானந்தர் தனது யாத்திரையின் போது குமரிமுனை வந்து அம்மனை வழிபட்டுவிட்டு இப்பாறையில் உட்கார்ந்து தியானம் செய்தார்.அவர் நினைவாக இம்மண்டபம் கட்டப்பட்டுள்ளது.
அய்யன் திருவள்ளுவர்
கடலில் காணப்படும் இன்னொரு பாறையில் அதி அற்புதமாக பிரம்மாண்டமாக நிற்கும் திருவள்ளுவர் சிலை இருக்கிறது.மிகவும் கலைநுணுக்கத்துடன் கூடிய இச்சிலையை அருகில் சென்று பார்க்க படகு போக்குவரத்து வசதி உள்ளது.கடல் அலைகளோடு போட்டிபோட்டு கம்பீரமாக காட்சி தரும் இந்த திருவள்ளுவர் சிலை காண்போர் கண்களை வியக்க வைக்கும்.
பொது தகவல்கள்
முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : நாகர்கோயிலிலிருந்து 25 கி.மீ.
திருநெல்வேலியிலிருந்து 91 கி.மீ.
மதுரையிலிருந்து 242 கி.மீ.
கன்னியா குமரி மிக முக்கிய சுற்றுலா தலம் என்பதால் நகரில் நிறைய தனியார் விடுதிகள் உள்ளன.

அருள் மிகு பகவதி அம்மன் திருக்கோயில்.மண்டைக்காடு
அம்மன் : பகவதி அம்மன்
பெருமை : பெண்சபரிமலை
சிறப்பு : உயரமான புற்று
விசேசம் : மண்டையப்பம்
தல மரம் : வேம்பு மரம்.
வழிபாடு : வெடிவழிபாடு
பிரசாதம் : புட்டமுது
ஊர் : மண்டைக்காடு
புராணபெயர் : மந்தைக்காடு
மாவட்டம் : கன்னியா குமரி
பிரார்த்தனை
கல்யாண வரம், குழந்தை வரம்,உடல் உறுப்புகள் குறைபாடு,திருஷ்டி , தோசம் , தலைவலி நீங்குதல் முதலிய பிரார்த்தனைகள்
நேர்த்தி கடன்
கல்யாண காரியங்களுக்கு பட்டு தாலி காணிக்கை செலுத்தலாம்
உடல் நலம் குணமாக வெள்ளியில் கை,கால் வடிவம் செய்து வைத்து வழிபட்டால் நோய் குணமாகிறது. மண் சோறு சாப்பிடலும் நடக்கிறது
குழந்தை வரத்திற்கு தொட்டில் கட்டி விடலாம்.
திருஷ்டி தோசம் கழிய வெடி வழிபாடு செய்யப்படுகிறது.
கோயிலின் சிறப்பம்சம்
கோயில் அமைப்பு : ஆரஞ்சு கலரில் முகப்பு . ஓடு வேய்ந்த மேற் கூரையுடன் மலையாளச் சாயல் படிந்த எளிமையுடன் இருக்கும் கோயில்.அதற்குள் மிகப் பிரம்மாண்டமாக உருவெடுத்து நிற்கும் புற்று.அதன் தலைப் பகுதியில் பகவதி அம்மன்.
மண்டையப்பம்: பச்சரிசி மாவு சர்க்கரை வெல்லம் கொண்டு மண்டையப்பம் செய்து அம்மனுக்கு நைவேத்தியம் செய்தால் தலைவலி நோய் குணமாகும் அதிசயம் நடக்கிறது.
தல பெருமைகள் :
*பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மிகப் பிரலமான கோயில்.
*15 அடி உயரம் வரை வளர்ந்து மேற்கூரையை முட்டிக்கொண்டிருக்கும் புற்று தான் பகவதி அம்மன் என்பது சிறப்பு
*இருமுடி கட்டி பெண்கள் பரவசமாக வந்து அம்மனை தரிசிக்கிறார்கள்
*தரையிலிருக்கும் ஸ்ரீ சக்சரம் மேல் புற்று வளர்ந்து கொண்வே வந்தது
*கோயில் 3 தடவைக்கு மேல் இடித்து கட்டப்பட்டுள்ளது.
*காலை மட்டுமே அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப் படுகிறது.
முக்கிய திருவிழாக்கள்
மாசிப் பெருந்திருவிழா 10 நாள் திருவிழா10 லட்சம் பக்தர்கள் கூடுவர்.
மாதாமாதம் பௌர்ணமி நாளில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடுவர்.
ஒவ்வொரு தமிழ் மாத கடைசி செவ்வாய் வெள்ளி கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் கூடுவர்.
தல வரலாறு
காஞ்சி சங்கராச்சாரியார் கேரள சீடர்களோடு வந்து ஸ்ரீ சக்கரம் வந்து வைத்து பூஜை செய்கின்றரார். தினமும் தான் தங்கியிருந்த குடிலில் இருந்து ஸ்ரீ சக்கரம் இருந்த இடத்தில் பூஜை செய்து கொண்டிருந்தபோது ஒருநாள் ஸ்ரீ சக்கரம் திரும்ப வரவே இல்லை.எடுத்துப் பார்த்தும் திரும்ப வரவில்லை.இந்த இடத்திலேயே இருந்து சித்து விளையாட்டுக்கள் நடத்தி மண்ணுக்குள் சமாதி ஆகிவிட்டார்.அந்த ஸ்ரீசக்கரம் இருந்த இடத்தின் மேல் புற்று வளர்ந்து வருகிறது.அந்த இடத்தில் சிறுவர்கள் விளையாடும்போது தடுக்கி ரத்தம் வருகிறது.இந்த விசயம் அப்பகுதியில் இருக்கும் கேரள மன்னர் மார்த்தாண்ட வர்மாவுக்கு தெரிவிக்கப் பட்டது. அவரும் அந்த இடத்தில் சிறு குடில் கட்டி வழிபாடு நடத்தினார். பின்பு காலப்போக்கில் அம்மனின் மகிமை பரவ பரவ பக்தர்கள் பெரும்அளவில் வந்து வழிபடும் பெரிய கோயிலாக புகழடைந்ததாக கூறப்படுகிறது.

முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : நாகர்கோயில் 23 கி.மீ.
திருவனந்தபுரம் 75 கி.மீ.
திருநெல்வேலி 95 கி.மீ.
தங்கும் வசதி : கோயிலில் விடுதி உள்ளது. கட்டணம் ரூ.25 , ரூ.50.
தவிர குடும்பத்தோடு வரும் பக்தர்கள் நாகர்கோயில் நகரில் உள்ள தனியார் விடுதிகளில் தங்கிக் கொண்டு கோயிலுக்கு சென்று வரலாம்.
கட்டணம் ரூ.150 முதல் ரூ.400 வரை.
போக்குவரத்து வசதி : *தென்தமிழ்நாட்டின் முக்கிய ஊர்களிலிருந்து நாகர்கோயிலுக்கு நிறையபஸ் வசதி உள்ளது.அங்கிருந்து சாலை மார்க்கமாக மண்டைக்காடு கோயிலுக்கு செல்லலாம்.
*அருகிலுள்ள ரயில் நிலையம் இரணியல், நாகர்கோயில்
*அருகிலுள்ள விமான நிலையம் திருவனந்தபுரம், மதுரை.

அருள் மிகு முத்தாரம்மன் திருக்கோயில் குலசேகரன்பட்டினம்.
மூலவர் : ஞானமூர்த்தீ
அம்பாள் : முத்தாரம்மன்
பெருமை : சுயம்பு
தலமரம் : வேம்பு
தீர்த்தம் : கடல்
ஆட்சி : அம்பாளே
சிறப்பு : கடற்கரை
ஊர் : குலசை
புராணபெயர் : வீரைவளநாடு
மாவட்டம் : தூத்துக்குடி
பிரார்த்தனை
அம்மை நோய் கண்டவர்கள் இத்தலத்தில் வழிபட்டால் உடினே குணமாகிவிடுகிறது.கை கால் ஊனம் , மனநிலை பாதிப்படைந்தவர்கள் , ஆகியோர் இத்தலத்தில் வழிபட்டால் குணமடைகின்றனர்.சொத்துகள் இழந்தவர்கள் இத்தலத்தில் வழிபட்டு அந்த கஷ்டத்திலிருந்து மீள்வதாக கூறுகிறார்கள்.வழக்கு வியாபார நஷ்டம் ஆகியவற்றிலிருந்தும் விடுபட்டு சுபிட்சம் அடைய இத்தலத்து முத்தாரம்மனை வேண்டிக்கொள்கின்றனர்.
நேர்த்தி கடன்
மாவிளக்கு பூஜை, அங்கபிரதட்சனம், தீச்சட்டி எடுத்தல், வேல் அம்பு குத்தல் ஆகியவை இத்தலத்துக்கு வரும் பக்தர்களின் முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது.
ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல், உண்டியல் காணிக்கை ஆகியவையும் பக்தர்களால் நேர்த்திகடனாக செலுத்தப்படுகிறது.
கோயிலின் சிறப்பம்சம்
சுவாமியும் அம்பாளும்:
ஜோதிடத்தில் செவ்வாய் வீட்டில் சுக்கிரனும், சுக்கிரன் வீட்டில் செவ்வாய் இருந்தால் அதை பரிவர்த்தனை யோகம் என்பர்.அதுபோல் இங்கு சுவாமி ஆற்றலை அம்பாள் வாங்கிச் சிவமயமாக உள்ளாள். அம்பாள் ஆற்றலைச் சுவாமி வாங்கி சக்திமயமாக உள்ளார். இதை பரிவர்த்தனை நிலை என்பர்.இங்கு அம்பாளுக்கு தான் ஆட்சி.
மதுரையிலும் இதே நிலைதான். எனவே மதுரையில் உள்ள மந்திரம், யந்திரம், தந்திரம் இங்கும் பின்பற்றப்படுகிறது.தந்திரம் என்பது பூஜை முறை, மந்திரம் என்பது தேவியை துதிக்கும் தோத்திரம், எந்திரம் என்பது சாமி சிலைகள் மருந்து சாத்திப் பதிக்கப்படும் போது சிலைகளுக்கு அடியில் வைக்கப்படும் செப்புத் தகடு.
முத்தாரம்மன் பெயர்காரணம்:
அம்மை நோயினை முத்துப் போட்டதாகக் கூறுவது மரபு.முத்துக் கண்டவர்கள் இங்கு அம்பாள் பீடத்தைச்சுற்றி நீர் கட்டச் செய்வர். இதனால் முத்துநோய் இறங்குகிறது.முத்துக்களை ஆற்றி குணப்படுத்தியதால் அன்னை , முத்து + ஆற்று + அம்மன் =முத்தா (ற்ற) ரம்மன் எனவும் அழைக்கப்படுகிறாள்.
தல பெருமைகள்
*சுவாமி அம்பாள் ஒரே பீடத்தில் வடக்கு பார்த்து இருக்கிறார்கள்.
*சுயம்பு வாக தோன்றியது.
*அம்மை நோய் குணமடைய இங்கு வழிபடலாம்.
*பிள்ளை வரம் வேண்டுதலுக்கு பெயர் பெற்றது.
*41 நாட்கள் விரதமிருந்து வழிபட்டால் லெப்ரஸி(தொழுநோய்),மனநிலை பாதிக்கப்பட்டவர்களின் நோய் குணமாகிறது.
தல வரலாறு :
1934 க்கு பின்புதான் இக்கோயில் தோன்றியது. சுயம்புவாகத் தோன்றிய சுவாமி அம்பாள் விக்ரகங்களே வழிபாடு செய்யப்பட்டு வந்தன.மைலாடி என்ற ஊரில் ஆசாரி ஒருவர் கனவில் அம்பாள் தோன்றி எனக்கு சிலை செய்து,அதை குலசையிலிருந்து வரும் அர்ச்சகரிடம் கொடுத்தனுப்பு என்று கூற, அதே போல் அர்ச்சகர் கனவிலும் தோன்றி ஆசாரி தரும் சிலையை சுயம்பு அருகே வைத்து வழிபடு என்று கூறி அதுபடியே நடந்தது.அம்பாள் தன் திருமேனியை தானே தேர்ந்தெடுத்தாள் என்பது இக்கோயில் வரலாற்றின் தனி சிறப்பு.
முக்கிய திருவிழாக்கள்
தசரா பெருந் திருவிழா(10 நாள்) புரட்டாசி நவராத்திரி விஜய தசமி அன்று கடற்கரையில் மகிஷாசுர சம்காரம்.இதுவே இத்தலத்தின் மிகப் பெரிய விழா ஆகும். மாவட்டத்தின் தென்பகுதி முழுவதையும் திருவிழாக் கோலமடையச் செய்து ஊர்கள் தோறும் இல்லம் தோறும் கொண்டாடப்படும் விழாவாக அமைகிறது.
ஆடிக்கொடை திருவிழா ( 3 நாள்) குறவன் குறத்தி வேஷம் கட்டுதல், காணிக்கை பிச்சை எடுத்து அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தல்.
சித்திரை அன்று சிறப்பு வழிபாடுகளும் அலங்காரத் தீபாராதனைகளும் நடைபெறுகின்றன.
ஐப்பசி விசு அன்று சிறப்புத் தீபாராதனைகளும் அன்னாபிசேகமும் நடைபெறுகின்றன.
திருக்கார்த்திகை அன்று சிறப்பு வழிபாடுகளும் அம்பாள் திருத்தேரில் எழுந்தருளிச் சொக்கப்பனைத் தீபம் ஏற்றுதல் உற்சவமும் சிறப்பாக நடைபெறுகின்றன.
மார்கழி தனூர் மாத பூஜை விசேசம்
மாசி மாதம் மகாசிவராத்திரி விழாவும் சிறப்பாக நடைபெறுகிறது.
பொது தகவல்கள்
முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : திருச்செந்தூரிலிருந்து 12 கி.மீ.
தூத்துக்குடியிலிருந்து 60 கி.மீ.
கன்னியாகுமரியிலிருந்து 72 கி.மீ.
திருநெல்வேலியிலிருந்து 70 கி.மீ.
தங்கும் வசதி : பக்தர்கள் தங்குவதற்கு கோயிலில் சேவார்த்திகள் தங்கும் மண்டபம் உள்ளது.குடும்பத்தோடு வரும் பக்தர்கள் திருச்செந்தூரில் உள்ள தனியார் லாட்ஜ்களில் தங்கிக்கொண்டு கோயிலுக்கு சென்று வரலாம்
கட்டணம் ரூ.100 முதல் ரூ.400 வரை.
போக்குவரத்து வசதி : *திருச்செந்தூரிலிருந்து பஸ்ஸில் சென்று தரிசிக்கலாம்.
*அருகிலுள்ள ரயில் நிலையம் திருச்செந்தூர்.
*அருகிலுள்ள விமான நிலையம் திருவனந்த புரம்.

திங்கள், ஜூன் 12
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் இருக்கன்குடி
அம்மன் : மாரியம்மன்
பிறஅம்மன் : வாழவந்தம்மன்
பிறஅம்மன் : ராக்காச்சிஅம்மன்
பிறஅம்மன் : பேச்சியம்மன்
பிறஅம்மன் : முப்பிடாரியம்மன்
காவல்தெய்வம் : கருப்பசாமி
முக்கிய தீர்த்தம்: வைப்பாறு
பிறதீர்த்தம் : : அர்ச்சுனாநதி.
ஊர் : இருக்கன்குடி.
மாவட்டம் : விருதுநகர்
பிரார்த்தனை
குழந்தை வரம் கேட்டல், கல்யாண வரம் வேண்டுதல்,உடல்உறுப்புகள் குறைபாடுகள் தீர நேர்ந்து கொள்ளுதல், அம்மை நோய் குணமாக வேண்டிக்கொள்தல், பார்வை இல்லாத பாவத்தை நீக்கி பார்வை தர வேண்டிக்கொள்ளுதல் ஆகியவை இத்தலத்துக்கு வரும் பக்தர்களின் முக்கிய பிரார்த்தனைகள் ஆகும்.இவை தவிர அம்மனிடம் வேண்டிக்கொள்ளும் அனைத்து பிரார்த்தனைகளும் நிறைவேறுவதாக கூறுகிறார்கள்
நேர்த்தி கடன்
அம்மனுக்கு அக்னி சட்டியும் ஆயிரங்கண்பானையும் எடுத்து அருளோடு வலம் வந்து வாயாற வேண்டிச் சென்று வாழ்க்கையில் வளம் பெறுவது இத்திருக்கோயிலின் சிறப்பாகும்.இது தவிர இருக்கன்குடி தாய்க்கு நேர்த்திகடனாக கயிறு குத்துதல்,கெடா வெட்டுதல் ஆகியவையும் , உடல் குறைபாடுள்ளவர்கள் உருவபொம்மை செய்து வைத்து வழிபடுகிறார்கள், குழந்தை வரம் வேண்டுவோர் தொட்டில் கட்டி வைத்து தங்கள் நேர்த்திகடன்களாக செய்கின்றனர்.
அம்மனுக்கு விளக்கு போடுதல்,அம்மனுக்கு புடவை சாத்துதல் , அன்னதானம் செய்தல் ஆகியவை தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகள் செய்தல் ஆகியவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்திகடன்களாக செய்கின்றனர்.
கோயிலின் சிறப்பம்சம்
அம்மன் தோற்றம்:
பொதவாக அம்மன் இடது காலை மடித்து வலது காலை தொங்கவிட்டபடி இருக்கும்.ஆனால் இந்த அம்மனோ இந்த அண்டசராசரத்தில் ஆக்கலும் அழித்தலும் நானே. நானின்றி ஓர் அணுவும் அசையாது, என்பதற்கேற்ப வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டிருக்கிறார்.இந்த அமைப்பே இருக்கன்குடி மாரியம்மனின் மிகப்பெரிய சிறப்பம்சமாகும்.
இருகங்கை குடி : அம்மன் தலம் அமைந்துள்ள இந்த ஊரின் தெற்கே பாயும் வைப்பாறு மற்றும் அர்ச்சுனா நதிகள் சூழ அன்னை குடிகொண்டுள்ள திருக்கோயில் அமைந்துள்ளது. இருகங்கைகள் கூடுவதால் இருக்கங்(ன்) குடி என்ற கூற்றில் இவ்வூர் போற்றப்படுகிறது.
அர்ச்சுனன் நதி :
அன்னையின் திருக்கோயிலுக்கு வடக்கே தவழும் அர்ச்சுனா நதி மேற்கே வத்திராயிருப்பு மலை எனப்படும் மகாலிங்க மலையிலே உற்பத்தியாகிறது. முன் காலத்தில் பஞ்ச பாண்டவர்கள் காடுகளில் திரிந்து கொண்டு இம்மலையடிவாரத்திற்கு வந்த போது நீராடுவதற்கு இடம் இல்லாமையால் அர்ச்சுனன் கங்கையை வணங்கி வருணக் கணையால் பூமியை பிளந்து அப்பிளவிலிருந்து தோன்றி பெருக்கெடுத்த ஆற்றில் பஞ்ச பாண்டவர்கள் திரௌபதியுடன் நீராடி மகிழ்நதார்கள் .அவ்வாறு தோன்றிய ஆறே அர்ச்சுனன் ஆறு என்று பெயர் பெறுவதாயிற்று.
இருக்கண்குடி யின் புராணப்பெயர்கள் : இருகங்கைகுடி, இருக்கங்குடி
தல பெருமைகள் :
*இத்தலத்தில் உள்ள வயன மண்டபத்தில் 20 நாட்கள் தங்கி 6 பூஜைகளுக்கும் போய் தீர்த்தம் எடுத்து தடவினால் கண்பார்வை கிடைக்கும்.
*அம்மன் தோன்றிய இடத்தில் உள்ள தல விருட்ச்சத்தில் தண்ணீர் எடுத்து ஊற்றினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
*மருத்துவர்களால் கை விடப்பட்ட அம்மை,தீராத வயிற்று வலி,கை கால் ஊனம் ஆகிய நோய்கள் குணமாகும் அதிசயம் இத்தலத்தில் நடக்கிறது.
*மருத்துவர்களால் கை விட்ட பின்புகூட இத்தலத்தில் வழிபடுவோர்க்கு கண்பார்வை கிடைக்கும் அதிசயம் நடக்கிறது.
*ஆறுகள் புடைசூழ நடுவே உள்ள ஆற்றுத் திட்டில் அமைந்துள்ள இத்திருக்கோயிலின் கிழமேல் அளவு 178 அடி , தென்வடல் அளவு 149 அடி
* அழகிய விமானத்துடன் கூடிய கர்ப்பகிரகத்தில் அருட்கலமாகிய மாரியம்மன் எழுந்தருளி இருக்கிறாள்.
*தென் மாவட்ட மக்களிடையே மிகப்பெரிய புகழையுடைய இக்கோயில் இவ்வட்டாரத்தில் மிகவும் பிரசித்தம்
தல வரலாறு :
சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு இப்பக்கத்தில் சாணி பொருக்குவதற்காக வந்த ஒரு பூசாரிப்பெண் தற்போது அம்மன் இருக்கும் இடத்தில் வைத்த கூடையை எடுக்க முடியாது திண்டாடினாள்.கூட்டம் கூடியது.அப்போது அப்பெண் அருள் கொண்டு ஆடினாள். அவள் நான் மாரியம்மை எனது திருமேனி இங்கே மணலில் புதைந்து கிடைக்கின்றது.என்னை எடுத்து வழிபடுங்கள் என்று வாக்கருளினாள்.அதுபோலவே மணலை தோண்டி அம்மை திருவுருவச்சிலையை கண்டெடுத்து சேவல் கூவாதலும் கழச்சிச் செடி முளைக்காததுமாகிய அவ்விடத்திலேயே அன்னை கட்டளையிட்டபடி கோவிலிலே நிலை நிறுத்தி வழிபடுவராயினர்.அன்று முதல் இன்று வரை நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டும் வரம் கொடுத்து வருகிறாள். மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாதலால் வெள்ளி கிழமைகளில் கூட்டம் அலை மோதும்.
முக்கிய திருவிழாக்கள்
ஆடி வெள்ளி திருவிழா : ஆடி கடைசி வெள்ளிக்கு முன் வெள்ளி கொடிஏற்றம் செய்து அன்று உற்சவர் கோயிலில் இருந்து அன்னையின் உற்சவர் திருமேனி இடப வாகனத்தில் எழுந்தருளச் செய்து அர்ச்சுனா நதியில் உலாவி திருக்கோயிலில் எழுந்தருளச்செய்யப்படுகிறாள்.
தை வெள்ளி திருவிழா , பங்குனி வெள்ளி திருவிழா.
தைகடைசி வெள்ளி, பங்குனி கடைசி வெள்ளியிலும் பெருந்திரளான மக்கள் அம்மன் அருள் பெறக் கூடுவது கண்கொள்ளாக்காட்சி ஆகும். விழாக் காலங்களில் அம்மன் அருள்பெற அர்ச்சுனா நதியிலும், வைப்பாறு நதியிலும் கூடும் மக்கள் வெள்ளம் வண்டிகளிலும் பிற வாகனங்களிலும் வந்து கூடி நேர்த்திகடன் செலுத்துவது மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்ச்சியாகும்.
மேற்கண்ட மாதங்களின் கடைசி வெள்ளி க்கிழமைகளில் 10 லட்சம் பக்தர்கள் திரள்வர் .
பொது தகவல்கள்
முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : விருதுநகரிலிருந்து 32 கி.மீ.
சாத்தூரிலிருந்து 8 கி.மீ.
அருப்புக்கோட்டையிலிருந்து 32 கி.மீ. திருநெல்வேலியிலிருந்து 82 கி.மீ.
மதுரையிலிருந்து 90 கி.மீ.
இவை தவிர குடும்பத்தோடு வரும் பக்தர்கள் சாத்தூர் அல்லது ,அருப்புக்கோட்டை உள்ள தனியார் லாட்ஜ்களில் தங்கிக்கொண்டு கோயிலுக்கு சென்றுவரலாம்
கட்டணம் ரூ.100 முதல் ரூ.300 வரை.
போக்குவரத்து வசதி :
பஸ்வசதி : சாத்தூர்,அருப்புக்கோட்டை, விருதுநகர் ஆகிய ஊர்களிலிருந்து நிறைய பஸ்கள் உள்ளன.
அருகில் உள்ள ரயில் நிலையங்கள் : சாத்தூர், அருப்புக்கோட்டை, மதுரை
அருகில் உள்ள விமான நிலையம் : மதுரை.
அருள்மிகு பத்திர காளியம்மன் திருக்கோயில் மடப்புரம்
அம்மன் : பத்ரகாளி
கோலம் : சம்ஹாரம்
கிரீடம் : அக்னி
உயரம் : 13 முழம்
கம்பீரம் : குதிரை
காவல்தெய்வம் : அய்யனார்
தலமரம் : வேம்பு
தீர்த்தம் : பிரம்மகுண்டம்
ஊர் : மடப்புரம்.
மாவட்டம் : சிவகங்கை.
பிரார்த்தனை
: செய்வினை, பில்லி, சூன்யம் ஆகியவற்றை இத்தலத்து அம்மன் தீயாய் பொசுக்கி விடுவதால் இத்தலத்து அம்மனை தங்கள் குலதெய்வமாக வழிபடுகிறார்கள்.பகைவர்களை வெல்லும் சக்தியையும் தருவதால் இத்தலத்து பத்ரகாளியம்மன் மிகவும் ஆக்ரோசமாக சக்தி உள்ளவர்.
பத்ரகாளியம்மனை வணங்கினால் கோர்ட் சம்பந்தபட்ட வழக்கு விசாரணைகள் எளிதில் வெற்றி கிடைக்கிறது.
வியாபார விருத்திக்காக இத்தலத்தில் வழிபடுவோர் நிறைய உண்டு. மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் எல்லாம் வழக்கமாக இத்தலத்தில் வழிபடுவதை அடிக்கடி பார்க்கலாம்.
நேர்த்தி கடன்
ஆரம்ப காலங்களில் சாமியாடிகள் கூடி களரி எனும் சாமி ஆடுவது வழக்கமாக இருந்தது.
அம்மனை குளிர்ச்சியூட்ட எலுமிச்சம் பழங்களால் ஆன மாலை அணிவிக்கப்படுகின்றன.
அம்மனுக்கு ஆடை அணிவித்தலும் படையலாக கருதப்படகிறது.
கோயிலின் சிறப்பம்சம்
பத்ரகாளியம்மன் தோற்றம்:
சம்கார தேவதையாக காட்சி தருகிறாள் பத்ரகாளியம்மன். கீழ்த்தியை நோக்கி திரிசூலம் கீழ்நோக்கிப் பற்றி கலியுகத்தில் அநீதிகளை அழிக்கும் சம்கார தேவதையாக தனது தலையில் சுடர்விடும் அக்கினயையே கிரீடமாக கொண்டு உலகைக் காக்க உலா வரும் கோலத்தில் நின்று அருளாட்சி செய்கிறாள். வலக்கையில் பற்றிய கீழ்நோக்கி திரிசூலம் அநீதியை அழிக்கவும், தலையில் சூடிய அக்கினி அழித்தவற்றை மீண்டும் எழவிடாது சாம்பலாக்கவும் நின்ற நிலை தன்னை நாடி வரும் தன் மக்களை என்றும் எப்போதும் காத்து வரும் ஆயத்தநிலையை உணர்த்துகிறது.
காளி நிற்கும் பீடம் நீளம் அகலம் உடையது. அதன் மேல் போருக்கு ஆயத்தமான நிலையில் தன் முன்னங்கால்களை தூக்கி பின்னங்கால்களை ஊன்றி அன்னையின் ஆற்றலை வெளிப்படுத்தும் சக்தி வடிவமான குதிரை நிற்கிறது.
அடைக்கலம் காத்த அய்யனார்
மூலஸ்தானத்தில் எழுந்தருளியிருக்கும் மூர்த்தி நின்ற கோலத்தில் காணப்படுகிறார்.வலது கை நீண்ட சுதையின் மீது அமைந்து நின்ற கோலத்தில் விளங்கும் இத்திருவுருவாகும்.இவரே இக்கோயிலின் காவல் தெய்வம். இத்தலத்தின் ஆட்சி தெய்வம் இவர் என்பதால் மிகவும் சக்தி தெய்வமென பக்தர்கள் பயபக்தியோடு கூறுகிறார்கள்
விநாயகர் : வினை தீர்க்கும் விநாயகர்
தீர்த்தம் : பிரம்ம குண்டத்தீர்த்தம்.
மணிகர்ணி தீர்த்தம்
தல பெருமைகள்
*அம்பாளுக்கு நிழல் தரும் விதமாக பிரம்மாண்டமாக குதிரை வாகனம் இருக்கிறது.
*மற்ற கோயில்களில் குதிரை மீது இருக்கும் அய்யனார் இங்கு தனியாக சன்னதியில் அமர்ந்திருப்பது தனி சிறப்பு.
*ஆயிரம் ஆண்டுகள் முந்திய பழமையான கோயில்.
*தேவாரம் பாடிய திருத்தலமாம் திருப்பூவநாதர் கோயிலுக்கு வடகிழக்கில் அமைந்துள்ள இத்தலம் இயற்கை எழில் கொஞ்சும் சோலைகளுக்கு நடுவே இருப்பது சிறப்பு
*மதுரை மண்டலத்தில் மடப்புரம் காளி என்ற வார்த்தை கேட்டாலே துஷ்டர்களும் நடுங்குவர் என்பது வழக்கம். இதனால் இவ்வட்டாரத்தில் இக்காளி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது.
தல வரலாறு :
ஒரு பிரளய காலத்தில் மதுரை நகரம் வெள்ளத்தால் சூழப்பட்டு முற்றிலும் மறைந்து விட்டது. அப்போது மீனாட்சி அம்மன் மதுரைக்கு எல்லை காட்டவேண்டும் என்று இறைவனிடம் கேட்க, சிவபெருமான் தன் கழுத்தில் உள்ள ஆதி கேசனை எடுத்து மதுரையை வளைத்தார்.மேற்கே திருவேடகமும் தெற்கே திருப்பரங்குன்றமும் வடக்கே திருமாலிருஞ்சோலையும் வைத்து எல்லையை வகுத்த இறைவன் கிழக்கில் தற்போது உள்ள மடப்புரத்தில் படத்தையும் வாலையும் ஒன்று சேர்த்து
எல்லை காட்டினார்.இதனால் ஆதிகேசன் வாயில் உள்ள விஷத்தை அம்மன் உண்டு இங்கு காளியாக எழுந்தருளினாள்.அங்குள்ள அய்யனார் காவல் தெய்வம் அம்மனுக்கு தன் வாகனமாகிய குதிரையை தந்து அம்மனுக்கு நிழல் தந்து அடைக்கலம் தந்தார்.இதனால் அடைக்கலம் காத்த அய்யனார் என்று அவர் பெயர் பெற்றார்.மிகப்பழமையான இத்தலத்திலுள்ள காளி பக்தர்களின் எண்ணற்ற வேண்டுதல்களை நிறைவேற்றி வருகிறாள்.
முக்கிய திருவிழாக்கள்
வாரத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கோயிலில் ஆயிரக்கணக்கில் மக்கள் கூட்டம் கூடுகிறது
பௌர்ணமி பூஜை பாலாபிஷேகம்.
தமிழ் மாத முதல் செவ்வாய் தோறும் 1008 திருவிளக்கு பூஜை.
பொது தகவல்கள்
முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : மதுரையிலிருந்து 19 கி.மீ.
சிவகங்கையிலிருந்து 30 கி.மீ.
தங்கும் வசதி :
கோயில் விடுதிகள் பொங்கல் மண்டபம்,பாலன் மண்டபம்.
கட்டணம் ரூ.200 முதல் ரூ.300 வரை.
அருகிலுள்ள திருப்புவனத்தில் தனியார் விடுதிகள் உள்ளன.
கட்டணம் ரூ.100 முதல் ரூ.200 வரை.
போக்குவரத்து வசதி : *மதுரை,சிவகங்கை, ஆகிய ஊர்களிலிருந்து மடப்புரத்துக்கு பஸ் வசதி உள்ளது..
*அருகிலுள்ள ரயில் நிலைம் மதுரை, மானாமதுரை.
*அருகிலுள்ள விமான நிலையங்கள் மதுரை.
சனி, ஜூன் 10
அருள் மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில், திண்டுக்கல்
அம்மன் : மாரியம்மன்.
காலம் : 18ம் நூற்றாண்டு
முன்பக்கம் : விநாயகர்
வடபுறம் : கருப்பண்ணசுவாமி
தென்புறம் : முனீஸ்வரசுவாமி
தென் வடக்கு: மதுரைவீரசுவாமி
வாயில்கள் : 3
ஊர் : திண்டுக்கல்.
புராணப்பெயர் : திண்டீஸ்வரம்
மாவட்டம் : திண்டுக்கல்.
பிரார்த்தனை
இங்கு அம்மனை வேண்டிக்கொண்டால் குழந்தை வரம் கிடைக்கும்.அம்மை மற்றும் உடல் உறுப்புகள் குறைபாடுகள் நீங்குகின்றன.மற்றும் தீராத நோய்களும் குணமாகின்றன.
நேர்த்தி கடன்
நோய் நொடிகளிலிருந்து நீங்க வேண்டும் என்பதற்காக மஞ்சளும், உப்பும் கொடி கம்பத்தடியில் இடுகிறார்கள்.
*கொடி ஏற்றும் போது பெண்கள் புனித நீர் அபிஷேகம் நடத்தி வார்கள் இதன் மூலம் அம்மனின் கோபம் தனிந்து நாட்டுக்கு நன்மை தருவதாக ஐதீகம்.
* தீச்சட்டி ஏந்திவருவது, குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அனுதினமும் வழிபட்டால் குழந்தைபாக்கியம் கிட்டும்...
*அவ்வாறு நன்மை பெற்றவர்கள் தங்கள் குழந்தைகளை கரும்பு தொட்டிலில் சுமந்தும், மாவிளக்கு ஏற்றி கண்களில் வைத்து அம்னை வழிபடுவது மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்ச்சியாகும்.
இதுபோன்ற பல்வேறு நேர்த்திகடனை செலுத்துவார்கள். இதுபோன்ற காலத்தில் சுமார் 20 லட்சம் பக்தர்கள் அம்மனை வழிபடுவார்கள்.
கோயிலின் சிறப்பம்சம்
திண்டுக்கல் மாவட்டம் வாஸ்து சாஸ்திரப்படி அமைந்துள்ளது. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நகரமாக திண்டுக்கல் உள்ளது. மேற்கு திசையில் மலையும், அதன் மீது கோட்டையும், அமைந்துள்ளது. 300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டபபட்ட கோட்டை இன்றும் அழியாமல் உள்ளது. இந்த கோட்டையிலிருந்து பழநிக்கு சுரங்கப்பாதை இருப்பதாகவும், இந்த வழியாக பல முறை திப்புசுல்தான் பழநிக்கு சென்றாக வரலாறு கூறுகிறது.இந்த மலைக்கோட்டையின் அழகான பின்ணனியில்தான் இந்த அம்மன் கோயில் இருக்கிறது.இந்த கோட்டையால்தான் அம்மனும் கோட்டை மாரியம்மன் என அழைக்கப்படுகிறாள்
தல பெருமைகள் :
*அம்மன் அமர்ந்த கோலத்தில் இத்தலத்தில் எழிலுற வீற்றிருக்கிறாள்
*8 கைகளுடன் காட்சி தரும் அம்மனின் வலது கைகளில் பாம்பு, சூலாயுதம், மணி, கபாலம், ஆகியவையும், இடது கையில் வில், கிண்ணம், பாம்பு, ஆகியவைகள் காணப்படுகின்றது.
* இந்த அம்மன் மற்ற தெய்வங்களை காட்டிலும் சிலையின் அடிப்ப குதி, பூமிக்கு அடியில் அதிக ஆழத்தில் புதைந்து இருப்பது சிறப் பாகும்.
தல வரலாறு :
பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு சிறிய பீடமும், அம்மனின் மூலஸ்தான விக்ரகம் மட்டுமே இருந்தது. மலைக்கோட்டையின் கீழ் திப்பு சுல்தான் காலத்தில் இருந்த ராணுவத்தினர் ஒரு சிறு மடம் நிறுவி மாரியம்மன் சிலையை வைத்தனர். அதுவே திண்டுக்கல் மக்களுக்கு "கோட்டை மாரியம்மனாகவும்' காவல் தெய்வாமாக உள்ளது.
இக்கோயிலுக்குகென்று சிறப்பு வாயில்கள் மூன்று உள்ளது. அம்மன் ஊர்வலக்காலங்களில் வெளியே செல்வது முன்புறமாக செல்லும். பின்புற வாயிகள் மாலைக்கோட்டையை ஒட்டியுள்ளது. ஆண்டுதோறும் மாசிமாதம் 20 நாட்கள் திருவிழா நடைபெறும்.
சன்னதியின் உள்புறத்தில் நூழைவாயில் கம்பத்தடி அமைந்துள்ளது. தாமிரத்தால் கலந்து செய்யப்பட்டடுள்ளது. அம்மன் சன்னதியை ஒட்டி முன்புறம் தெற்குப்பக்கம விநாயகர் கோவிலும், வடக்குப்பக்கம் மதுரைவீரன் சாமிகோயில், முன்புற வடக்கில் நவக்கிரங்கள், பின்பக்கம் தென்புரம் மூனீஸ்வரசுவாமிசன்னதி, வடபுறம் கருப்பணசாமி சன்னதி உள்ளது.காளியம்மன் சிலை, துர்கை சிலை உள்ளது. மேலும் சிம்மவாகனம், ரிஷப வாகனம், குதிரை வாகனம், ஆகிய வாகனங்கள் விழாக்காலத்தில் அம்மன காட்சிதருவார்.
முக்கிய திருவிழாக்கள்
திருவிழா தொடங்க முன் அறிவிப்பாக மாசிமாதம் அம்மாவாசை முடிந்த 5ம் நாள் கொடியேற்றம் செய்யப்பட்டு தொடர்ந்து 20 நாள்கள் சிறப்பாக விழா கொண்டாடப்படும் அதிகப்பட்சமாக ஒரு மாதம் வரை திருவிழா நடைபெறும்
பொது தகவல்கள்
முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : திண்டுக்கல் நகரின் மத்தியில் கோயில் உள்ளது.
மதுரையிலிருந்து 50 கி.மீ.
தங்கும் வசதி :
குடும்பத்தோடு வரும் பக்தர்கள் திண்டுக்கல் நகரில் இருக்கும் தனியார் விடுதிகளில் தங்கிக் கொண்டு கோயிலுக்கு செனறு வரலாம்.
போக்குவரத்து வசதி :
பஸ்வசதி : திண்டுக்கல் நகரின் மத்தியில் கோயில் இருப்பதால் கோயிலுக்கு ஆட்டோ அல்லது பேருந்து மூலம் கோயிலுக்கு சென்று வரலாம்
அருகில் உள்ள ரயில் நிலைம் : திண்டுக்கல்
அருகில் உள்ள விமான நிலையம் : மதுரை.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)