புதன், ஜூன் 21

அருள்மிகு அஷ்டலட்சுமி திருக்கோயில் பெசன்ட் நகர், சென்னை

1.பெருமாள் : மகாவிஷ்ணு
2.தாயார் : மகாலட்சுமி
3.உடல்நலம் : ஆதிலட்சுமி
4.உணவு : தான்யலட்சுமி
5.தைரியம் : தைரியலட்சுமி
6.சௌபாக்கியம் : கஜலட்சுமி
7.குழந்தைவரம் : சந்தானலட்சுமி
8.வெற்றி : விஜயலட்சுமி
9.படிப்பு : வித்யலட்சுமி
10.செல்வம் : தனலட்சுமி

பிரார்த்தனை

இங்கு அஷ்ட லட்சுமிகளாக அருள் பாலிக்கும் மகாலட்சுமியை வணங்கினால் சிறப்பு வாய்ந்த வாழ்க்கை அமைய பெறலாம்.தனித்தனி சன்னதிகளில் அருள் பாலிக்கும் ஒவ்வொரு தெய்வங்களும் தனித்தனி சிறப்பைபெற்றதாக உள்ளது.

உடல்நலம்பெற ஆதிலட்சுமியை வணங்குதல் நலம்

பசிப்பிணி நீங்க தான்யலட்சுமியை வணங்குதல் நலம்

தைரியம் பெற தைரியலட்சுமியை வணங்குதல் நலம்

சௌபாக்கியம் பெற கஜலட்சுமி யை வணங்குதல் நலம்

குழந்தைவரம் வேண்டுமெனில் சந்தானலட்சுமியை வணங்குதல் நலம்

காரியத்தில் வெற்றி கிடைக்க விஜயலட்சுமியை வணங்குதல் நலம்

கல்வி ஞானம் பெற வித்யாலட்சுமியை வணங்குதல் நலம்

செல்வம் பெருக தனலட்சுமியை வணங்குதல் நலம்

நேர்த்தி கடன்

வேண்டிய வரங்ள் எல்லாம் கிடைக்கும் இத்தலத்தில் அபிசேக ஆராதனைகள், புடவை சாத்துதல் ஆகியவையும், பிரசாதம் செய்து விநியோகிப்பதும் இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது.

தல வரலாறு :

சுமார் 25 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கோயில் பெருமளவு பக்தர்கள் வருகையினால் நாளடைவில் சென்னையின் மிகவும் புகழ்பெற்ற கோயிலாக ஆனது.அதோடு சென்னை பெசன்ட் நகர் பீச் மிகவும் புகழ் பெற்றது.இந்த பீச்சுக்கு அருகில் இக்கோயில் அமைந்துள்ளதால் "பக்தர்கள் தவிர ஏராளமான சுற்றுலா பயணிகளும் இக்கோயிலுக்கு வருகை தருகின்றனர்.சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் என்ற ஊரில் இருக்கும் பெருமாள் கோயில் மாடலைப் போலவே இக்கோயில் அடுக்கடுக்காக கட்டப்பட்டுள்ளது மிகவும் விசேசம்.அருமையான சலவைக் கற்களால் கட்டப்பட்டுள்ள இக்கோயிலில் உள்ள சுதைகள் மிகவும் அழகுற அமைக்கப்பட்டுள்ளன

கோயிலின் சிறப்பம்சம்

*8 லட்சுமிகளும் ஒரே கோயிலில் தனித்தனி சன்னதிகளில் வீற்றிருப்பது சிறப்பு

*கோபுரத்தில் ஓம்கார வடிவத்தில் அஷ்டாங்க விமானத்துடன் கூடியதாக திருக்கோயில் அமைந்துள்ளது (ஓம்கார ஷேத்திரம்)

*கடல் அருகே அமைந்திருக்கும் அழகிய திருக்கோயில்

*கோபுரத்தின் நிழல் பூமியில் விழாது.இது தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தின் சிறப்பை ஒட்டி அமைந்துள்ளது.

*பெருமாள் நின்ற கல்யாணத் திருக்கோலம் தாயார் 9 கஜம் மடிசார் புடவை கட்டி நிற்கின்றனர்.

*ஆறுகால பூஜைகள் இத்தலத்தில் நடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்க அம்சம்

*இங்கு முழுக்க முழுக்க நெய் விளக்குகள் மட்டுமே ஏற்றப்படுகின்றன.ள் கூட்டம் அலைமோதும் தலம்.

முக்கிய திருவிழாக்கள்

*புரட்டாசி நவராத்திரி திருவிழா 10 நாட்கள் இத்தலத்தில் பத்து விதமான அலங்காரங் களில் திருவிழா நடைபெறும் இத்திருவிழாவின் போது பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கூடுவர்

*தீபாவளி, லட்சுமி பூஜை, தை வெள்ளி, ஆடி வெள்ளி ஆகிய நாட்களில் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.அந்த தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருவர்.

ஹை லைட்ஸ்

தலமரம் : வில்வ மரம்
விமானம் : அஷ்டாங்க விமானம்
தீர்த்தம் : சமுத்திர புஷ்கரணி(வங்கக் கடல்)

பொது தகவல்கள்

முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : சென்னை நகரின் மத்தியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் பெசன்ட் நகர் அமைந் துள்ளது.

தங்கும் வசதி :

குடும்பத்தோடு வரும் பக்தர்கள் சென்னை நகரில் உள்ள தனியார் லாட்ஜ்களில் தங்கிகொண்டு கோயிலுக்கு சென்று வரலாம்.

கட்டணம் : ரூ.200 முதல் 800 வரை

போக்குவரத்து வசதி :

பஸ்வசதி : சென்னையின் மிக முக்கிய பகுதியாவும் பெசன்ட் நகர் கடற்கரை புகழ் பெற்றதாக விளங்குவதாலும் பெசன்ட் நகருக்கு சென்னையின் மற்ற எல்லா பகுதியிலிருந்தும் பேருந்து வசதி நிறைய உள்ளது.

அருகில் உள்ள ரயில் நிலையம் : சென்னை.
அருகில் உள்ள விமான நிலையம் : சென்னை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக