அம்மன் : பகவதிஅம்மன
பிறபெயர் : தேவிகன்னியாகுமரி
இறைவி : தியாகசௌந்தரி
இறைவி : பால சௌந்தரி
முக்கிய தீர்த்தம் பாபநாசதீர்த்தம்
புகழ் : இந்தியதென்கோடி
சிறப்பு : சுற்றுலாதலம்
ஊர் : கன்னியாகுமரி
புராணபெயர் : குமரிகண்டம்
மாவட்டம் : கன்னியாகுமரி
பிரார்த்தனை
கன்னிகா பூஜை, சுயம்வர பூஜை ஆகியவை செய்தால் திருமண காரியங்கள் கைகூடுகிறது.
காசிக்கு போகிறவர்களுக்கு கதி கிடைக்க வேண்டுமாயின் இக்கன்னியாகுமரிக்கு வரவேண்டுமென்று நம் புராணம் முறையிடுகிறது.
இது சிறந்த தீர்த்தத் துறையையுடைய புண்ணிய கடற்கரையாகும் என்பதால் இங்கு நீராடினால் பாவம் தொலைந்து புண்ணியம் கிடைக்கும்.
நேர்த்தி கடன்
அம்மனுக்கு விளக்கு போடுதல்,அம்மனுக்கு புடவை சாத்துதல் , அன்னதானம் செய்தல் ஆகியவை தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகள் செய்தல் ஆகியவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்திகடன்களாக செய்கின்றனர்.
இங்குள்ள கடற்கரையில் பக்தர்கள் தங்கள் காலம் சென்ற மூதாதையார்களுக்கு காரியம் செய்ய எள்ளும் தண்ணீரும் இறைத்து பிதுர்கடன் செய்கிறார்கள்
தல பெருமைகள் :
*பரசுராமர் குமரிதெய்வ உருவை இவ்விடத்தில் அமைத்து வழிபட்ட தலம்.
*இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்த சிறப்பு வாய்ந்த தலம்
*பராசக்தியுறையும் கோயில் இந்தியா முழுமையும் பரந்த புகழுடையது.
*கடல் முனையில் இருந்தாலும் கோயிலுக்குள் உள்ள கிணற்றில் உப்புக் கரிக்காத நல்ல தண்ணீர் கிடைக்கிறது என்பது அதிசயம்.
*முன்பிருந்த கோயில் கடல் கொண்டு விட்டது.இப்போதிருப்பது இரண்டாவதாக பிரதிஷ்டை செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது.
*பிதுர்கடன் கழிக்க ஏற்ற தலம்.
*வடஇந்தியர்கள் வருகை அதிகம் உள்ள கோயில்
முக்கிய திருவிழாக்கள்
*புரட்டாசி நவராத்திரி திருவிழா 10 நாள்
*வைகாசி விசாகம் 10 நாள் தேரோட்டம், தெப்போற்சவம்10 ஆயிரம் பக்தர்கள் கூடுவர்.
இத்திருவிழா நாட்களில் காலையிலும் இரவிலும் ஊர் தெரு வழியாகத் தேவியின் திருவுருவம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். ஒன்பதாவது நாள் தேர்த்திருவிழாவும் பத்தாவது நாள் தெப்பத்திருவிழாவுமாகும். தெப்பத் திருவழிõவன்று நன்றாகக் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் தேவியின் திருவுருவம் நீரின் மேல்வலமாக மிதப்பில் கொண்டு செல்லப்படும்.
கோயிலின் சிறப்பம்சம்
இது முக்கடல் சங்கமிக்கும் பாரதத்தின் தென்கோடி முனை.கிழக்கே வங்கக்கடலும் தெற்கே இந்தியப்பெருங்கடலும் மேற்கே அரபிக்கடலும் கூடி அலைமோதும் அழகிய காட்சியுடையது.சில பௌர்ணமி நாளன்று, இக்கடல்கரையில் நின்று மாலைக் கதிரவன் மேலைக் கடலில் மறைவதையும் முழுமதி கீழைக் கடலில் கிளர்ந்தெழுவதையும் ஒரு சேரக் கண்டு களிக்கலாம்.
காந்தி மண்டபம்:
1948ல் தேசப்பிதா காந்தியடிகளின் அஸ்தி இங்கு கடலில் கரைக்கப்பட்டது. கரைக்கும் முன்பு அஸ்தி வைக்கப்பட்ட கலசம் ஒரு பீடத்தின் மீது வைத்து அஞ்சலி செய்யப்பட்டது. அவ்விடத்தில் ஒரு நினைவுச்சின்னம் கட்ட காந்தயடிகளின் சீடர் கிருபளானி மேற்கொண்ட முயற்சியால் 1954 ல் அடிக்கல் நாட்டி 1956 ல் அழகிய மண்டபமாக கட்டிமுடிக்கப்பட்டது.
காந்திஜி பிறந்த நாளான அக்டோபர் 2ந்தேதி சூரிய ஒளி பீடத்தின் மீது படும்படியாக அமைத்திருப்பது தனிசிறப்பு.சுற்றுலாப்பயணிகளை அதிகமாக கவர்ந்திழுக்கும் மண்டபமாக திகழ்கிறது.
விவேகானந்தர் நினைவு மண்டபம்
குமரி முனையின் கிழக்கே கடலில் இரண்டு அழகிய பாறைகள் உள்ளன.அதில் பெரிய பாறை சுமார் 3 ஏக்கர் பரப்பும் கடல் மட்டத்திலிருந்து 55 அடி உயரமும் உடையது.அதில் ஓரிடத்தில் பாதம் போன்ற அடையாளம் காணப்படுகின்றது.அதை தேவியின் திருப்பாதம் என்று அழைக்கிறார்கள்.1892 ல் சுவாமி விவேகானந்தர் தனது யாத்திரையின் போது குமரிமுனை வந்து அம்மனை வழிபட்டுவிட்டு இப்பாறையில் உட்கார்ந்து தியானம் செய்தார்.அவர் நினைவாக இம்மண்டபம் கட்டப்பட்டுள்ளது.
அய்யன் திருவள்ளுவர்
கடலில் காணப்படும் இன்னொரு பாறையில் அதி அற்புதமாக பிரம்மாண்டமாக நிற்கும் திருவள்ளுவர் சிலை இருக்கிறது.மிகவும் கலைநுணுக்கத்துடன் கூடிய இச்சிலையை அருகில் சென்று பார்க்க படகு போக்குவரத்து வசதி உள்ளது.கடல் அலைகளோடு போட்டிபோட்டு கம்பீரமாக காட்சி தரும் இந்த திருவள்ளுவர் சிலை காண்போர் கண்களை வியக்க வைக்கும்.
பொது தகவல்கள்
முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : நாகர்கோயிலிலிருந்து 25 கி.மீ.
திருநெல்வேலியிலிருந்து 91 கி.மீ.
மதுரையிலிருந்து 242 கி.மீ.
கன்னியா குமரி மிக முக்கிய சுற்றுலா தலம் என்பதால் நகரில் நிறைய தனியார் விடுதிகள் உள்ளன.
கட்டணம் ரூ.150 முதல் ரூ.800 வரை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக